காராமணி குழம்பு

தேதி: July 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

காராமணி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அனைத்து தேவையானப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது வாணலியில் காராமணியை போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, அரை மணிநேரம் வேக வைத்து எடுக்கவும். வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். புளி ஊறியதும் அதை கரைத்து புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய்த் துருவல் மற்றும் சோம்பு இரண்டையும் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளியில் மிளகாய் தூள், உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு தாளிக்கவும். எண்ணெயில் வடகம் நன்கு பொரிய வேண்டும்.
வடகம் பொரிந்ததும் அதில் நறுக்கின வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து வெங்காயம் வதங்கியதும் அதில் கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி தீயை அதிகமாக வைத்து 2 நிமிடம் கொதித்து விடவும்.
2 நிமிடம் கழித்து குழம்பு பொங்கி வந்ததும், வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் காராமணியை போட்டு ஒரு முறை கிளறி விடவும்.
பிறகு ஒரு தட்டை வைத்து மூடி 7 நிமிடம் கொதிக்க விடவும். இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும்.
7 நிமிடம் கழித்து குழம்பு நன்கு கொதித்து சற்று கெட்டியாக ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான காராமணி குழம்பு தயார். இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. ஜோதி கோவிந்தராஜ் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காராமணி என்றால் என்ன? தட்டபயிறும் காராமணியும் ஒன்றா? please inform me

Its an excellent site to all house wives

Portia Manohar
I too had the confusion earlier,now its clear both are same.

Portia Manohar

இந்த குழம்பில் வடகம் என்றால் என்ன?தட்டைப் பயிறு ஊறவெச்சுட்டேன்.இதை செய்யனும் இன்று

வடகம் செய்முறை யாரும் சமைக்கலாமில் இடம்பெற்றுள்ள <a href="http://www.arusuvai.com/tamil/node/2011" target="_blank">வெண்டைக்காய் புளிக்குழம்பு </a> குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வையிடவும்.

intha kuzhambu romba nallaa irukku. kaaramaNi enRaal bLaak ai biinS enRu sollappaduthee athuvaa? naan mooth dhaal vaiththu seytheen migavum nanRaaga irunthathu.

umaa.

Hey nice yaar!

qwerty