மோர்க்களி

தேதி: July 27, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
புளித்த மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மோர் மிளகாய் இல்லாவிட்டால் காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணை - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்


 

புளித்த மோரில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கரைத்துத்தனியாக வைத்துகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணை விடவும்.
காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு எல்லாம் வறு பட்டதும் மோரில் கரைத்து வைத்த அரிசி மாவைக்கொட்டிக் கிளறவும்.
சுருளக் கிளறி வெந்ததும் (கையில் ஒட்டாமல் வரும் பதம்) இறக்கி வைத்துப் பரிமாறவும்.
இதற்குத்தொட்டுக்கொள்ளக்கூட எதுவும் தேவையில்லை.


மேலும் சில குறிப்புகள்


Comments

மோர்க்களி ரொம்ப நல்ல டேஸ்டா இருந்தது. வாயில போட்டோடன
நேரா வயித்துக்குள்ளயே வழுக்கிண்டு போயிடுத்து. இனி அடிக்கடி
எங்க வீட்ல மோர்க்களிதான். நன்றி மாமி

ஆமாம் மாமி, எனக்கு இந்த மோர் கூழ் பத்தி கேள்விப்பட்டாலோ இல்ல செய்தாலோ எங்க பாட்டி நியாபகம் தான் வரும். ஆஹா இப்பவே வாய் ஊருதே, நான் ஒரு 16, 17 வயசு இருப்பேன் அப்போ சாப்பிட்டு இருக்கேன், பாட்டி செய்து அதோட வத்த குழம்போட கொடுப்பாங்களே அப்படியே சூட்டோட சாப்பிட்டா சூப்பர் ருசியா இருக்கும். இங்க குறிப்புல பார்த்ததும் எனக்கு இந்த மோர் களி செய்ய ஆசை ஆனா எப்படி வருமோன்னு பயம்.

மொழி,
நேத்து சாயங்காலம் மோர்க்களி செய்தேன். 6 குட்டி மோர்மிளகாயை வறுத்து, அதற்குப்பிறகு தாளித்து செய்தேன். மோர்க்களியைக் கண்ணால் கூட பார்க்கமாட்டேன் என்று சொல்லும் என் பையன் சாப்பிட்டுவிட்டு அசடு வழிந்து கொண்டு வந்து அம்மா இன்னும் கொஞ்சம் இருக்கா என்றான். அம்மா இவ என்னோட தட்டிலே இருந்து மிளகாயை எடுத்துக்கொண்டாள். வறுத்த மோர் மிளகாய் இருக்கா என்றான்.

மொழி, நான்ஸ்டிக் கடாய் இருக்கா. அதில் செய்து ட்ரை பண்ணுங்க. ஆர்வம் இருந்தா போதும். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி ஸ்ரீ அண்ணாவுக்கு மோர் கூழ் பத்தி தெரியல போல, ம் நாண் ஸ்டிக் இருக்கு. நிச்சயம் செய்துட்டு சொல்றேன். அப்பறம் மாமி வாங்க போங்கன்னு எல்லாம் என்ன கூப்பிட வேண்டாமே ப்ளீஸ் ஏதோ ரொம்ப தூரமா தெரியுது மொழியின்னே கூப்பிடுங்கோ.

மொழி,
சரிடீ பொண்ணே. இது எப்படி இருக்கு? ஹஹஹஹஹா

அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி, எங்க பாட்டிகூட இதை செய்வா, அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு பிடிக்காது, ஆனா, இப்போ பாட்டி இல்லை, பாட்டி கையால களி சாப்பிட ஆசையா இருக்கு, அது இனி முடியாதுன்னாலும், உங்க குறிப்ப பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது, கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்கிறேன்

அன்புடன்
பவித்ரா