என்ன செய்யலாம்?உதவவும்.

என்னை பற்றி சில...எனக்கு 24 வயது.என் கனவருக்கு 34 வயது.காதல் திருமணம்.வெவ்வேறு நாட்டை சார்ந்துள்ளோம்(மலேசியா,சிறிலங்கா).திருமணம் முடிந்து 2 1/2 வருடங்கள் ஆகிறது.இவருக்கு(status) இல்லை.நான் வர இயலாது நீ இங்கே வா பிடித்திருந்தால் register பண்ணிக்கொள்ளலாம் என்றார் நாணும் வந்தேன் UKவுக்கு பல கனவுகளுடன்.சில நாட்களிலே இவர் குடும்பத்தினரின் குனம் அரிய கன்டேன்.இருத்தாலும் என் கனவருக்காக பொறுத்துப்போனேன்.(they force me to married him ,but i was refuse.i said thats i want to go back my home country.it is too early and im young).வந்து 3மாதத்திலே திருமணம் முடிந்தது.(without any future plan).திருமணத்தன்று எனக்கும் என் கனவரின் குடும்பத்தினருக்கும் பெரிய சன்டை.என் ஆசைகளை இவர்கள் எற்றுக்கொள்ளவில்லை.பல விதத்தில் என்னை தப்பானவளாக பார்த்திருக்கிறார்கள்.என் தாயுடன் பேசுவது தப்பு என்றார்கள்.(language problem without proper listen)நீ வேண்டாம் நாட்டுக்கே போ என்றவர்கள்.including my husband,சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் கல்யானமே நடந்தது.no one beside me on that time and im alone on my wedding day.நாலு பேர் பார்த்தால் தப்ப சொல்லுவாங்க(நான் receptionனுக்கும் registerறுக்கும் design saree கேட்டது தப்பா?.அதனால்லா நாங்கள் சொல்லுவதைகேள் என்றவர்கள்.i listen to them.இன்று என் வாழ்க்கையை நீனைத்தலே எனக்கு கோப கோபமாகவருது.சமிப்பகாலமாக இவருடைய பெற்றோர்கள் முதல் கூடபிறந்தவர்கள் அனைவரும் எங்கலுடன் அவ்வளவாக பேசுவதில்லை.உதவி வேண்டும் என்றால் வீட்டுக்கு வருவார்கள் இல்லை போண் பண்ணுவார்கள்.வீடுக்கு வந்தால் என்னால் முடிந்த வரை நன்றாக பார்ப்பேன்.அனால் அவர்களோ என்னை கன்டால் தெரியதவர் போல நடந்துக்கொள்வர்கள்.வீட்டுக்கு சென்றால் வா என்று கூட சொல்லாமல் சமையல் அறையிலோ இல்லை வெளியவோ போய்விடுவார்கள்.இவர் அம்மாதான் கவனிப்பார்.(இவரின் அம்மா,அப்பா,தம்பி.இப்போழுதான் சிரிலங்காவிலிருந்து தன்ச்சை கோரி வந்துள்ளார்கள்)எது எடுத்தாலும் தப்பு தப்பு தான் நான் என்ன செய்வது.மறவரை என்னுடன் ஒப்பிடுகிறார்கள்.1 என்றால் போல்லதவராம். சாரியை செரியாக கட்டியுள்ளேனா என்று கேட்க்கப்போக தங்கயின் கனவர் நீ எனிமேல் சாரி கீரையின்னு இங்க வராதைன்னு சொல்லிட்டர்.இருந்தும் நான் ஒரு முட்டாள் அவை வீட்ட போய் அவமானம் பட்டுதான் வருவேன்.மாமா மாமியை என்னுடன் வந்து இருங்கன்னு சொன்ன வீடு சின்னது,பிள்ளையில்லைன்னு சொல்லுறாங்க.தம்பி எங்களுடன் இருக்கிறான்.எங்க வீட்ல நடக்கிறதை அங்கால சொல்லுரது அவை போண் பன்னி என்ன எதுன்னு கேட்ப்பாங்க.இதை இன் மாமா மாமியிடம் சொன்னால் நீ தான் செரியில்லை என்கிறார்கள்.ஆனால் அவைக்கு எல்லாம் தெரியும் இருந்தும் பிள்ளைகளின் பெயர் கேட்டுபோகாமல் பார்த்துகொள்கிறார்கள்.என் கனவர் வாயே திறக்க மாட்டார் இல்லையில் அவை அவை புரிந்துகொள்ளவேண்டும் நான் என்ன செய்வது என்பார்.இங்கு நான் செத்துபோய்க்கொண்டிகுக்கிறேன்.(get high bp)இந்த வயதிலே அவ்வளவுக்கு மனக்கவலை.நான் என்ன செய்யவேண்டும்.எனக்கு அறுதல் சொல்ல கூட பக்கத்தில் யாரும் இல்லை.அம்மாவிடம் சொல்ல என்னால் இயலாது.அன்புக்காக ஏங்குகிறேன்.எல்லாரும் வேண்டும் என்று நீனைக்கிறேன்.ஏன் இவர்களால் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை..ஒரு அனாதை போல இருக்கிறேன் .உதவவும்..

ஹலோ ஷிவ்யா ஸ்ரீ எப்படி இருக்கின்றீர்கள்? தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் கூறியபடி தங்களின் போன பதிவிற்கு என்னால் உடனே பதிலளிக்க முடியா விட்டாலும் உங்களை தினமும் நினைத்துக் கொள்வேன். நல்ல வேளை வீட்டுக் குறிப்பிலும் இந்த பதிவை பதித்துள்ளதால் மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள சுலபமாகி விட்டது. சரி விசயத்திற்கு வருகின்றேன்.

காதல் திருமணம் செய்துக் கொண்ட உங்களுக்கு முதலில் எனது ஆசியும் கூறி பதினாறு வளங்களையும் பெற்று பெறு வாழ்வு வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

இந்த உலகத்தில் காதலில் தோல்வியுற்று எத்தனையோ ஒரு தலை ராகங்கள் வாழுகின்ற பொழுது, அதில் வெற்றிப் பெற்று திருமணமும் செய்துக் கொண்டு வாழ்கையைத் தொடங்கியுள்ள நீங்கள் உண்மையிலேயே மகா பாக்கியச்சாலி தான். இதை நினைத்தே நீங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை ஓட்டி விடலாம் என்று நினைக்கின்றேன். என்னைப் பொருத்தவரையில் மனைவியாகட்டும், கணவனாகட்டும், ஒருத்தர் மீது ஒருத்தர் எந்த வித எதிர்பார்ப்பில்லாமல் வாழும் வாழ்க்கை தான் சுகமாக இருக்கும்.

தங்களின் பதிவைப் படிக்கும் பொழுது என்னைப் பொருத்தவரையில் இதுவெல்லாம் ஒரு பிரச்சனையேயில்லை. இவைகள் எல்லாம் தினமும் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களாகவே தோன்றுகின்றது. இதற்கு நீங்கள் கவலைப் படத்தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

பொதுவாக பெண்கள் செய்யும் தவறு என்னவென்றால், கணவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது. மற்றபடி அவரைச் சார்ந்தவர்களை கடமைக்கு கவனிப்பதை பார்த்திருக்கின்றேன். அது முற்றிலும் தவறு. காரணம் கணவர் என்பவரும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான். தன் மாமியார் மாமனார் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு இருக்கும் அதே குணம் தான் தன் கணவருக்கும் இருக்கும் என்ற உண்மை நிலையை மனம் ஏற்க தவறுவதால் தான் இதுப் போன்ற, அவருக்காக பொருத்துக் கொள்வது, அவரின் சப்போர்ட்டை எதிர்பார்ப்பது போன்ற உணர்வுகள் ஏற்ப்படுகின்றன என்று நினைக்கின்றேன்.ஆகவே இதுப் போன்ற எதிர்ப்பார்ப்புகளெல்லாம் நடை முறை வாழ்க்கைக்கு ஒத்துவராது என்றே கூறுவேன்.

ஆக நான் உங்களுக்கு கூறுவது நீங்கள் நீங்களாக இருங்கள் அது போதும். பொதுவாக திருமணமானப் பெண்கள் செய்யும் தவறு என்னவென்றால் மனத்தில் கணவுகளை தேக்கி வைத்துக் கொண்டு அது நிறைவேற வில்லை என்று புலம்புவது தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. கணவு காண்பது தவறில்லை ஆனால் அது உங்களை மட்டும் சார்ந்தவையாக இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையை செம்மையாக நடத்த உங்கள் பங்கு என்ன என்பதை மட்டும் சிந்திக்கும் படியாக இருக்கட்டும்.

மேலும் கணவருக்கு எந்தெந்த விதங்களில் தோள் கொடுக்கலாம் என்பதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்,
பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றி கணவுக் காணுங்கள், இவ்வாறு உலகத்தில் எவ்வளவோ விசயங்கள் உள்ளதை நீங்களே அறிவீர்கள். அதை விடுத்து நீங்களே ஏன் உங்களுக்கு அம்மா, அப்பா, கணவர், மாமியார், மாமனார், மைத்துனர், ஓரகத்தி என்று கைவிலங்குகளையும், கால் விலங்குகளையும் பூட்டிக் கொள்ள வேண்டும்.? கணவரை மகிழ்விப்பதும், மாமியார் வீட்டாரை மனங்குளிர வைப்பதும் தான் ஒரு மனைவியின் வேலையல்ல. புகுந்த வீட்டாரின் குடும்பத்தை மரியாதையோடு நடத்தினாலே போதும்.

மற்றபடி அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கின்றேன். அவர்கள் நம்மை என்ன நினைக்கின்றார்கள் என்று தேவையில்லாமல் ஆராய்ட்ச்சி செய்துக் கொண்டு போனால் அதற்கு ஒரு முடிவும் தென்படாது. அதற்கு பதில் எல்லோரிடத்திலும் இயல்பாக இருந்து விட்டால் நம்மை எந்த பிரச்சனையும் அனுகாது என்று உறுதியாக நம்பலாம்.

ஆகவே தேவையில்லாமல் கவலைப் பட்டுக் கொண்டு, மற்றவர்கள் நம்மை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டு,பொன்னான நேரங்களை வீணாக்காமல், வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்ற பாடல் வரிகளை முனுமுனுத்துக் கொள்ளுங்கள், புத்துணர்ச்சி தன்னால் வந்து விடும்.

உலகத்தில் நம்மைத் தவிர நமக்கு சொந்தமானது என்று எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது மற்ற உறவுகளுக்காக நாம் நம்மை வருத்திக் கொள்வது, மற்றவர்களின் செயலுக்கு நாம் கோபப்படுவது போன்ற விசயங்கள் எந்த விதத்திலும் நியாயமில்லை. நாம் செய்யும் தவறுகளுக்கு தான் நாம் பொருப்பேற்க்க வேண்டும், அதைக் குறித்து தான் வருத்தப் பட வேண்டுமே ஒழிய மற்றவர்களின் செய்யலகளால் நாம் பாதிப்படையக் கூடாது என்பது என் கருத்து. ஆகவே எதற்கும் கவலைப்படாமல் எப்பொழுதும் சிரிச்சிக்கிட்டிருங்க சந்தோசமாயிருங்க சரியா.இதில் மேலும் வேறு ஆலோசனை தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கவும். ஒகே நன்றி.

மேலும் சில பதிவுகள்