இறால் எண்ணெய் குழம்பு

தேதி: July 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - கால் கிலோ
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மல்லி பொடி - 3 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
சோம்பு - 2 தேக்கரண்டி
தாளிக்கும் வடகம் - பாதி உருண்டை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 6 தேக்கரண்டி


 

இறாலை கழுவி சுத்தப்படுத்தவும். தேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும். வடகம் பொரிந்ததும் இறாலை போடவும்.
மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.
வாணலியை மூடி வைத்து வேக விடவும். இறால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு தங்கை மாலதி எப்படி இருக்கீங்க? உங்க எளிமையான இந்த இறால் எண்ணெய் குழம்பை இப்போதான் செய்து முடித்தேன், வடவம் கையிருப்பு இல்லை ஆகவே வெங்காயம் பூண்டு கறிவேப்பிலைச் சேர்த்து செய்தேன். நல்ல மணமாகவும் சுவையாகவும் உள்ளது. நன்றி.

அன்புள்ள மாலதி

இதில் வடகம் என்று குறிப்பிடப்படுவதை எப்படிச்செய்வது?

நன்றி

ஷாந்தா

அன்பு தங்கை சாந்தா கீழ்காணும் லிங்கில் இருக்கும் வெங்காய வடகத்தை தான் அவ்வாறு அழைப்பதுண்டு, பார்க்கலாம் சகோதரி மாலதி என்ன கூற்றுகின்றார்களென்று. http://www.arusuvai.com/tamil/node/1049

ஹாய் மனோகரி அக்கா !

உடன் பதிலுக்கு மிக்க நன்றி , எப்படி நலமாக இருக்கிறீர்களா?

அன்புடன்,

ஷாந்தா

ஹலோ சாந்தா நான் நலமுடன் இருக்கின்றேன் நன்றி,அங்கு ரூமுக்கு வந்துருங்க நிறைய பேசலாம்.

நான் வடகம் என்று குறிப்பிடுவது ஏறக்குறைய நீங்கள் குறிப்பிட்டிருப்பதுதான். அதன் சரியான செய்முறையை தீபாவளிக்கு பிறகு எழுதுகிறேன். இந்த வடகத்தைதாளிப்பதற்கும், சட்னி செய்வதற்கும் மட்டும்தான் பயன்படுத்துவார்கள். சட்னி செய்முறையும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

மாலதியக்கா, நேற்று இதுதான் செய்தேன். வடகம் இன்னும் செய்து பழகவில்லை. வெங்காயம் , மிளகாய் சேர்த்தேன். புட்டுக்கு மிக மிக சுவை. என் ஹஸ் பார்த்ததுமே கேட்டார் என்ன அறுசுவை பார்த்தா செய்தீங்கள் என்று. பின் சாப்பிட்டதும் சொன்னார். அறுசுவைக் குறிப்புகளையே றை பண்ணுங்கள் இந்தக் கறி மிகவும் அருமை என்று. படம் இணைக்கிறேன்.

நாங்கள் இலங்கை என்பதால் இந்தியக் கறிகள் வித்தியாசமான சுவையாக இருக்கிறது.
முக்கியமாக உங்கள் முறைகளில் தயிர் சேர்க்கிறீங்கள். நாங்கள் சேர்ப்பதில்லை. இப்போ சேர்க்கப் பழகிக்கொண்டேன்.

அதிலும் ஊரில் தயிரை சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் நாங்கள் அசைவம் சாப்பிடும் பிளேற்றில் போடமாட்டோம். அசைவ நாட்களில் தயிர் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் அவ்வளவு தூய்மையானதென்று. இங்கு வந்த பின் முதன்முதலில் ஒரு கேரள நண்பர் வீட்டுக்கு சாப்பிடப் போனோம், அசைவச் சாப்பாடு, சாப்பிட்டதும் அவர் அதே பிளேற்றில் தயிரை போட்டுச் சொன்னார் உணவின் முடிவில் நிட்சயம் தயிர் உண்ண வேண்டும் அது எல்லாவற்றிற்கும் நல்லதென்று. எனக்கு ஒரே அந்தரமாகப் போய் விட்டது. அதனுடன் நானும் பழகிக் கொண்டேன். இப்போ சிக்கின் குருமா தயிர் போட்டு செய்வேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த குழம்பின் படம்:

<br />
<img src="files/pictures/prawn_curry.jpg" alt="Prawn curry" />