தக்காளிக்காய் கூட்டு

தேதி: August 2, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளிக்காய் - 1/4 கிலோ
பயத்தம் பருப்பு - ஒரு சிறிய கப்
தேங்காய்த் துருவல் - ஒரு மூடி
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 (விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
தாளிக்க - தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய்
உப்பு - தேவையான அளவு


 

பயத்தம் பருப்பை வேக வைக்கவும்.
தக்காளிக்காயை உப்பு போட்டு வேக வைக்கவும்.
குக்கரில் வைப்பதானால் இரண்டையும் ஒன்றாக வேக வைக்கலாம்.
தேங்காய், சீரகம், மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்பு, தக்காளிக்கலவையுடன், அரைத்த விழுதைக்கலந்து சிறிது கொதிக்க வைக்கவும். சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று உங்க தக்காளிக்காய் கூட்டு செய்தேன். ரொட்டிக்கு ரொம்ப நன்றாக இருந்தது.என் தோழி நிறய்ய தக்காளிக்காய் குடுத்தா. அதை நான் துவையல் செய்தேன், மீதியை எப்படி கூட்டு செய்வது என்று அருசுவையில் தேடினேன் உங்க குறிப்பு கிடைத்தது,செய்தேன் ரொம்ப டேஸ்டியா இருந்தது.