தக்காளிக்காய் துவையல்

தேதி: August 2, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளிக்காய் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க - தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய்
உப்பு - தேவையான அளவு


 

தக்காளிக்காயை சிறு துண்டங்களாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விடவும்.
உளுத்தம் பருப்பு, காய்ந்த மிள்காய், நறுக்கிய தக்காளிக்காய் போட்டு வதக்கவும்.
வதக்கியதை உப்பு சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மாமி, இன்னிக்கு இட்லிக்கு தக்காளிக் காய் துவையல் செய்து சாபிட்டாச்சு. சூப்பர்.

அன்புடன்

சீதாலஷ்மி

மாமி, பச்சரிசி இட்லிக்கு, இந்தத் துவையல் சூப்பர் காம்ப்பினேசன். 2பல் பூண்டும் சேர்த்துச் செய்தேன். மூவரும் விரும்பிச் சாப்பிட்டோம்.
நன்றிகள் பல...............

அன்புடன்:-)..........
உத்தமி:-)

சீதாலட்சுமி, உத்தமி இருவருக்கும் என் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி