சோயா தக்காளி வறுவல்

தேதி: August 3, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா உருண்டைகள்- 2 கப்
பொடியாக அறிந்த தக்காளி- 2 கப்
எண்ணெய்- 5 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
இஞ்சி விழுது- 1 ஸ்பூன்
பூண்டு விழுது- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
கீழே உள்ள பொருள்களை மையாக அரைக்கவும்:
முந்திரிப்பருப்பு-8
சோம்பு- 1 ஸ்பூன்
பட்டை-1
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி


 

சோயா உருண்டைகளை அவை மூழ்குமளவிற்கு சூடான வென்னீரில் அமிழ்த்தி வைத்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பிறகு அந்த வென்னீரைக் கொட்டிவிட்டு, மறுபடியும் குளிர்ந்த நீரை சோயா மூழ்குமளவு ஊற்றி 15 நிமிடங்க்ள் வைக்கவும்.
பிறகு அந்த நீரையும் ஊற்றி விட்டு சோயா உருண்டைகளை நன்கு பிழிந்தெடுக்கவும்.
இப்போது சோயா உருண்டைகள் சமைப்பதற்கு ரெடி.
வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
தக்காளியையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
நன்கு தக்காளி மசிந்ததும் இஞ்சி, பூண்டு விழுதுகளைச் சேர்த்து நன்கு சில நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது சோயா உருண்டைகளை தேவையான உப்பு சேர்த்துப் போட்டு குறைந்த தீயில் நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்த மசாலா, கொத்தமல்லி சேர்த்து மேலும் சில நிமிடங்கள் சமைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்