தக்காளி தோசை 2

தேதி: August 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பழுத்த தக்காளி - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம்- சிறிது
உப்பு - தேவையான அளவு.


 

பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
மசிந்ததும் தக்காளி, காய்ந்த மிளகாய்,பெருங்காயம், சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலக்கி தோசை வார்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi
ஜே மாமி!(நீங்க தானே),நான் உமா இப்போ தான் உங்க கூட முதன்முதலா பேசுவதால் இந்த குழப்பம்,தவறா எடுத்து கொள்ளாதீர்கள்.

எனக்கு தக்காளி தோசைன்னு ஒன்னு இருக்கிறதா என்றே தெரியாது,என் கணவருக்கு ஹாஸ்டலில் சாப்பிட்டு வெறுத்து போயிருந்தார் போலிருக்கு எனக்கு தெரியாது.உங்க ரெஸிப்பி பார்த்து செய்தேன் மிக மிக அருமையா வந்தது.

சூப்பராயிருக்கு,இப்படி சூப்பர் டேஸ்ட் நான் சாப்பிட்டதில்லை,அது வேற மாதிரி எனக்கு பிடிக்காது என்றார்.உங்களுடைய ரெஸிப்பி எல்லாமே ரொம்ப சூப்பர்.இந்த தக்காளி தோசை எனக்கும் மிகவும் பிடித்துவிட்டதால் இனி எங்க வீட்டு டிபன் லிஸ்ட்டில் இதுவும் உண்டு.குழந்தை கூட சாப்பிட்டான்.
இது மாதிரி மேலும் நிறைய‌ டேஸ்டி ரெஸிப்பிஸ் கொடுங்க‌.

மிக‌வும் ந‌ன்றி
உமா.