பெங்களுர் கத்திரிக்காய் தோல் துவையல்

தேதி: August 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிஞ்சு பெங்களூர் கத்தரிக்காய் தோல் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அ 3.
பெருங்காயம் - சிறிது
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 டீஸ்பூன்


 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விடவும்.
எண்ணை காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு வறுக்கவும்.
வறுபட்டதும் பெங்களூர் கத்திரிக்காயின் தோலைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்