நண்டு கட்லெட்

வழங்கியவர் : malathi
தேதி : வெள்ளி, 03/08/2007 - 17:16
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- நண்டு - அரை கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு - 2
- பெரிய வெங்காயம் - ஒன்று
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
- ப்ரெட் தூள் - ஒரு கப்
- மைதா - அரை கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லிக் கீரை - சிறிது
- நண்டை வேக வைத்து உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
- நண்டு சதையை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்கு, நண்டு சதை, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிக் கீரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- வாணலியை சூடாக்கி அதில் இந்த கலவையை போட்டு வதக்கி கெட்டியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- மைதா மாவில் சிறிது உப்பு போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- நண்டு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.
- இதை மைதாமாவு கரைசலில் நனைத்து ப்ரெட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
57 நிமிடங்கள் 17 sec முன்பு
ஒரு மணி நேரம் 33 sec முன்பு
2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு