ரவை பணியாரம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ரவை - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சீனி - ஒரு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

தேங்காயைத் துருவி மிக்ஸியில் அடித்து முதல் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா போட்டு அதில் தேங்காய்ப்பால் விட்டு கெட்டியாக கரைத்து, ஊறிய பின் சீனியைச் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் ஏலப்பொடி, நறுக்கிய முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குழிக்கரண்டியினால் அளவாக மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து சுடவும்.
இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வெந்ததும் சிவக்க விடாமல், வெள்ளையாக எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்