ஜீரா ரைஸ்

தேதி: August 4, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1 ஆ
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு.
நெய் - 1 டீஸ்பூன்


 

சாதத்தை உதிர், உதிராக வடித்து வைத்துக்கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை விடவும்.
நெய் உருகியதும் முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.
வறுபட்டதும், பொடி உப்பு போட்டு சாதத்தில் கலக்கவும்.
சுவையான ஜீரா ரைஸ் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினைப் பார்த்து செல்வி. இந்திரா அவர்கள் தயாரித்த ஜீரா ரைஸின் படம்

<img src="files/pictures/aa174.jpg" alt="picture" />