குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

முதலில் அவர்களிடம் நம்முடைய கோபதாபங்களை காட்டாமல் நம்மால் முடிந்தவரை பொறுமையாக இருப்பது. நம்முடைய எரிச்சல்களை அவர்களிடம் காட்டுவதால் குழந்தைகளுக்கு தாங்கள் எதற்காக இப்படி நடத்தப்படுகிறோம் என்பது புரியமுடியாமல் போகும்.மாறாக அவர்கள் தவறு செய்யும் பொழுது மட்டுமே அவர்களை கண்டிக்கவெண்டும்.அடிப்பது அதிகமாக கத்துவது போன்ற செயல்கள் அவர்களின் மனநிலையை பாதிக்கும் ஆகவே நமக்கு பிடிக்காத செயல்களை செய்யும் பொழுது இப்படி செய்யாதே இப்படி செய் என சொல்லிகொடுக்கவேண்டும்.

அவர்களுக்கு நம்முடைய செயல்கள் ஒரு எடுத்துகாட்டாக விளங்கவேண்டும்.நம்மிடம் இருந்துதான் பெரும்பாலான விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.அவர்களின் எதிரில் நாம் சண்டையிடுவது தகாத வார்த்தைள் உபயேகிப்பது போன்றவை எப்பொழுதும் தவிர்க்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை திணிக்ககூடாது.உணவில்கூட அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும்.சிறுவர்களாக இருந்தாலும் அவர்கள் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவர்களின் கருத்துகளை கேட்கவேண்டும்.

கேட்டதெல்லாம் வாங்கிகொடுப்பதால் பணத்தின் அருமை தெரியாமல் போகலாம்.அதற்காக எல்லாவற்றிற்கும் பணத்தை காரணம் சொல்லி தவிர்க்காமல் இது விலை அதிகம் இன்னோர் சமயம் வாங்கிகொள்ளலாம் என சமானபடுத்துதல் நல்லது.

அவர்களால் முடிந்த சிறு சிறு வேலைகளை செய்யசெல்வது நல்லது.
பொருட்களை எடுத்த இடத்தில் வைப்பது,சாப்பிட்டபின் தட்டை சமையலறையில் போடுவது,அவர்களின் சின்ன ஆடைகளை மடிப்பது போன்ற சிறு சிறு வேலைகள்.இதனால் அவர்களின் பொறுப்புணர்ச்சி வளரும்.மேலும் எதற்கும் உங்களை சார்ந்திருக்காமல் அவர்களாகவே செய்யமுற்படுவார்கள்.

அடுத்து அவர்கள் சொல்வதை கேட்கவேண்டும்.இதனால் அவர்களின் உள்மனதில் என்ன இருக்கிறது என அறிய முடியும்.அவர்களின் தேவைகளை புரிந்துகொள்ள முடியும்.சிலநேரங்களில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதாவது செய்யும் பொழுது அவர்களின் எதிர்ப்பை உதாசினப்படுத்தாமல் என்ன காரணத்திற்காக என தெரிந்துகொள்வது நல்லது.
மீண்டும் வருவேன்.

Hello Babu,
என் தமிழ் ஒகேவா?தொடர்ந்து அடிக்காம இப்படியே திரும்பிபார்காம போயிடலான்னுதான் கேட்கிறேன்.

நீங்க சொன்ன ஒவ்வொரு point உம் ரொம்ப சரி..நீங்க அழகா எழுதரீங்க..அதனால தைரியமா இன்னும் நிறைய எழுதுங்க

Hello thalika,
thanks.மத்தவங்க விரட்டறதுக்கு பதிலா கொஞ்சம் முன் எச்சரிக்கையா கேட்டுட்டு வரலாமேன்னுதான்.தழிழ் எழுதுவதை விட்டு பல வருடம் ஆகிவிட்டது.தழிழ் தாய்மொழியாக இல்லாதவர்களல்லாம் எழுதும் போது நாமளும் பண்ணலாமேன்னுதான் வந்திட்டேன்

என் 1.5 வயது குழந்தைக்கு இன்னும் காது குத்தவில்லை..ஏன் என்ன என்று எல்லரும் கேட்கிறார்கள்...நாம் பார்த்து ரசிக்க வேண்டி குழந்தையை கொடுமைப் படுத்த வேன்டுமா என்று தான் யோசிக்கிரேன்...கொஞ்சம் பெரிதான பின் எனக்கு காது குத்த வேன்டும் என குழந்தை சொல்லும்போது குத்தி விடலாம் என்று தோன்றுகிறது..என்ன் செய்ய??

குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே காது குத்துவது, விஞ்ஞான ரீதியாக நல்லது.அதுவும் இல்லாமல் சிறிய வயதில் காது குத்தினால்,வலி இருந்தாலும்,மிகவும் விரைவில்,ஆறிவிடும்.நரம்பு மேல் அல்லாமல், குத்தினால் மிகவும்நல்லது.எங்கள்பக்கம் குழந்தைகளுக்கு தங்க ஊசியில் குத்துவார்கள்.அதனால், செப்டிக் ஆகும் என்ற பயம் இல்லை.
அன்புடன் விமலா.

Hi thalika,
வலிக்காமல் காதுகுத்தப்படும் இப்படி விளம்பரங்களை இந்தியாவில் நீங்கள் பார்த்ததே இல்லையா?எனக்கு பையன் என்பதால் இது எனக்கு தேவைபடவில்லை.ஆனால் இருக்கிறது.மருத்துவரிடமே வலி இல்லாமல் செய்துகொள்லலாம்

சகோதரி விமலா அவர்களுக்கு,

காது குற்றிக்கொள்வது விஞ்ஞான ரீதியில் எந்த வகையில் நல்லது என்பதை விளக்க முடியுமா? கொஞ்சம் விஞ்ஞானம் தெரிந்து கொள்ளும் ஆசையில் கேட்கின்றேன்.

இந்தியாவில் இருந்து நான் என்ன செய்ய ரோஸ்மேரி??இங்கே uae-il 2 கடைகளில் கேட்டுப்பார்த்து விட்டேன்..இல்லையென்ட்றார்கள்...அட்மின் கேட்ட அதே கேள்வி தான் எனக்கும்..விஞ்ஞான ரீதியில் தெரிந்து கொள்ள ஆசை...முதன் முதலாக கேட்கும் விஷயம் என்பதால் எனக்கும் ஆவல்

HELLO MADAM,
நீங்க UAE LAயா இருக்கீங்க?
இங்க எல்லா ஹாஸ்பிடலிலும் காது குத்துவார்கள்.
பீடீயாட்ரீஷியனிடம் கன்சல்ட் பண்ணினீர்களா?
நீங்க UAE யில் எங்கனு சொல்லுங்க நான் எந்த ஹாஸ்பிடல்னு அட்ரஸ் சொல்றேன்.

Hello thalika,
what did you ask?a earstud or ear piercing gun?

மேலும் சில பதிவுகள்