வடக சட்னி

தேதி: August 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

வடகம் - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வடகத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.
வரமிளகாய், புளி போட்டு வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாலதி,
எங்க வீட்டில் எத்தனையோ வருஷமாக தாளிக்கும் வடகம் செய்கிறோம்.தாளிக்க மட்டுமே உபயோகிப்போம். இன்று உங்கள் செய்முறை பார்த்து செய்தேன்.அரைத்தவுடன் உப்பு சரியா இருக்கா என்று பார்த்தேன் அவ்வளவு தான்.கடைசியில் நான் சாப்பிட வந்தால் வெறும் பாத்திரம் தான் இருந்தது.

i was looking for 'vadaga chutney' & fortunately i found it posted by u. i'm going to try for today's dinner. thankyou

prabha srinivasan

prabha srinivasan

i was looking for 'vadaga chutney' & fortunately i found it posted by u. i'm going to try for today's dinner. thankyou

prabha srinivasan

prabha srinivasan

//வடகம் - 2-டீஸ்பூன்// புரியவில்லை. வடகம் வட்டமாகத்தான் பார்த்திருக்கிறேன். தெளிவுபடுத்த இயலுமா?
நன்றி.
இமா

‍- இமா க்றிஸ்

இமா..!! வடகம் உருண்டையாகத்தான் இருக்கும். ஆனால் அதை உபயோகப்படுத்தும்போது உடைத்துவிட்டு உதிர்த்து விடவேண்டும். அந்த உதிர்த்த வடகம் - 2 ஸ்பூன்

மிக்க நன்றி மாலதி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் மாலதி,
நேற்றே பின்னூட்டம் கொடுத்திருக்க வேண்டும். மறந்துவிட்டேன். வடக சட்னி சுவையாக இருந்தது. நன்றி.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

இமா..!! வடகம், தேங்காய், புளி, வரமிளாய் வறுத்து அரைக்கும் துவையலும் நன்றாக இருக்கும். அந்தக்குறிப்பு பிறகு எழுதுகிறேன். நன்றி இமா..!!