வெண்டைக்காய் ஃப்ரை

தேதி: August 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்பொடி, உப்பு (அல்லது ஏதாவது ஒரு சிக்கன் மசாலா பௌடர் )
வெள்ளை எள் - 4 தேக்கரண்டி
சோள மாவு - 6 தேக்கரண்டி
அரிசி மாவு - 4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வெண்டைக்காயை தலைப்பகுதியை வெட்டி எடுத்து விடவும். மீதியுள்ள வெண்டைக்காயை நீளமாக சன்னமாக நறுக்கவும்.
மசாலா பொடி, சோளமாவு, அரிசிமாவு, வெள்ளை எள் இவற்றை கலந்து கொள்ளவும்
நறுக்கிய வெண்டைக்காயை இந்த கலவையில் போட்டு கலக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
எண்ணெயை காயவைத்து மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கீங்க? ஏனோ நீங்கள் என்னிடம் மட்டும் பேசுவதில்லை பரவாயில்லை, நான் நினைத்து கொள்வேன், நீங்கள் பெரியவங்க கூடத்தான் பேசுவீங்கன்னு. மேடம் இன்னக்கி சாம்பாருக்கு உங்களோட இந்த வெண்டை ப்ரை தான் செய்தேன். காம்பினேசன் சூப்பர் நல்ல டேஸ்ட் மேடம் கிரிஸ்பியாவும் இருந்துச்சு முதலில் நான் நிறைய தண்ணீர் தெளிச்சுடேன். அப்ப்றம் கொஞ்சம் அரிசிமாவு சேர்த்துக் கொண்டேன். மேடம் இந்த வாரம் உங்க ரெசிபி தான் செய்ய போறேன் மேடம். நைட் கொஞ்சமா மிளகு இடியப்பமும், இட்லிக்கு வெஜிடபுள் கொத்சு செய்யலாம்னு இருக்கேன் செய்துட்டு சொல்றேன் மேடம்.

ஹரிகாயத்ரி!.... எப்படி இருக்கீங்க? இனிமேல் நாம் நிறைய பேசலாம். என் ரெசிப்பீஸ் ட்ரை பண்ணியதற்கு நன்றி. அப்புறம் காயத்ரி...... இந்த ஹாட் க்ளைமேட்டுக்கு இனிப்பு தக்காளி என்ற என்னுடைய ரெஸிப்பி செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். பழ அவல் என்று சமீபத்தில் ஒன்று எழுதினேன் அது இந்த கோடை வெய்யிலில் அடுப்பில் வேகாமல் செய்யக்கூடிய ஈஸியான ரெஸிப்பி. ட்ரை பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்கள். வெஜ்டபிள்கொத்ஸ் என் பேரனுக்கு மிக, மிக பிடிக்கும். எல்லா காய்களும் சேர்ப்பதால் நான் அடிக்கடி செய்து கொடுப்பேன்.

இந்த ஃபிரை கடைந்த பாசிப்பயருடன் சாப்பிட அருமை.இப்பொழுதுதான் டேஸ்ட் பார்த்துவிட்டு வருகிரேன்.நன்றி
செல்வி

சவுதி செல்வி

வெண்டைக்காய் ஃப்ரை ரொம்ப நல்ல இருந்தது.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா..!! வெண்டைக்காய் ஃப்ரை பிடித்திருந்ததா? ஒரு கல்யாண வீட்டில் வெண்டைக்காயை மீன் வறுவல் மாதிரியே செய்திருந்தார்கள். அந்த ரெஸிப்பி செய்முறை உங்களுக்கு தெரியுமா? நானும் யாருக்காவது தெரியுமா என்று விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி...!!

மீன் வறுவல் மாதிரி என்றால் இப்படி கூட செய்து பார்க்கலாம்,வெண்டைகாயை நன்றாக அலசி தண்ணீர் துடைத்து விட்டு தலைபகுதியில் உள்ள கொண்டையை எடுத்து விட்டு பாதி கீறி விட்டு கொள்ளவும்.ஓவனில் 2 நிமிடம் வைத்து ஆறியவுடன் மஞ்சல் தூள்,மிளகாய்த்தூள் ,மல்லி தூள்,சீரகத்தூள்,உப்பு,லெமன் ஜூஸ்,கொஞ்சம் கார்ன் மாவு சேர்த்து பிசறி பொரித்து பாருங்கள்.வேண்டுமானால் பூண்டு 2 பல் தட்டியும் சேர்த்து கொள்ளலாம்.மீன் பொரித்தது போல் இருக்கும்.அக்கா நீங்க கேட்டீங்களேன்னு எனக்கு தெரிந்ததை சொன்னேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மாலதி மேடம் வெண்டைக்காய் ஃப்ரை செய்தேன் டேஸ்ட் நல்லா இருந்தது மேடம் நன்றி.

ஊர் பேரு கேட்டவுடனே உருட்டுகட்டை, ஆட்டொவெல்லாம் ரெடியாயிட்டு இருக்கோனு நினைச்சிட்டேன்:)(நீங்க அப்படியெல்லாம் செய்ட்மாட்டீங்கனு தெரியும்)

ஆசியா..!! மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் கொஞ்சம் மீன் டேஸ்ட் வரும் என்று நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி வெண்டைக்காயை கீறிவிட்டு இந்த மசாலாவையும் போட்டு செய்து பார்க்கலாம்.
நன்றி ஆசியா...!! எப்ப ஊருக்குப்போகிறீர்கள்?

கவி..!! வெண்டைக்காயை வட்டவட்டமாகவும் நறுக்கி பொரித்தெடுக்கலாம். டேஸ்டில் வித்தியாசம் இருக்காது. பயப்படாதீங்க....!! ஆட்டோவெல்லாம் வராது...!!

நான் எழுதும்போது மிளகை விட்டுவிட்டேன்.ஆனால் வெங்காயம் அரைத்து இதுவரை சேர்த்ததில்லை.செய்து பார்க்கிறேன் அக்கா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்வி..!! இந்த வெண்டைக்காய் ஃப்ரை தயிர்சாதம் கூடவும் சாப்பிட நன்றாக இருக்கும். வெள்ளை எள் சேர்ப்பதால் சுவை வித்தியாசமாக இருக்கும். நன்றி...!!