வெண்டைக்காய் தக்காளி பச்சடி

தேதி: August 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 1/4 கிலோ
நல்ல பழுத்த பெரிய பெங்களூர் தக்காளி - 2
தேங்காய் துருவல் - 1 மூடி
கடுகு சிறிது
காய்ந்த மிளகாய் - 1
தாளிக்க - தேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்
புளித்தண்ணி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை


 

வெண்டைக்காய், தக்காளியை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, புளித்தண்ணீர், மஞ்சள் பொடி பொட்டு அடுப்பில் வைத்து வேக விடவும்.
தேங்காய், மிளகாய், பாதி கடுகு மூன்றையும் மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை வெந்த காயுடன் சேர்க்கவும்.
சேர்ந்து வந்ததும் இறக்கி தேங்காய் எண்ணையில் தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி, தைப்பூசத்தன்று "வெண்டைக்காய் தக்காளி பச்சடி" செய்தேன், மிகவும் நன்றாகயிருந்தது. சிறிதளவு வெந்தயமும் தாளிதத்தில் சேர்த்தேன், மணமாக இருந்தது. வழுவழுப்பில்லாமலிருக்க வெண்டைக்காயை முதலில் கொஞ்சம் எண்ணைவிட்டு வதக்கினேன்.
நன்றிகள் பல...............

அன்புடன்:-)..........
உத்தமி:-)

நன்றி உத்தமி. இது மலையாள சமையல்.
மிளகூட்டல், ரசம், இந்தப்பச்சடி காம்பினேஷன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி