மிளகூட்டல்

தேதி: August 6, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெங்களூர் கத்திரிக்காய் - 1
வெந்த துவரம் பருப்பு - 1 சிறிய கப்
தேங்காய் - 1 மூடி
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பெங்களூர் கத்திரிக்காயை நறுக்கி உப்பு போட்டு வேக வைக்கவும்.
தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் அரைத்து வெந்த காயுடன் சேர்க்கவும்.
அரைத்த விழுதையும், வெந்த பருப்பையும் சேர்க்கவும்.
சேர்ந்து வந்ததும் இறக்கி தேங்காய் எண்ணையில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நன்றாக இருந்தது. நான் துவரம் பருப்பை சேர்த்து செய்தேன்.

ரொம்ப நல்லாயிருந்தது மாமி.பாசிப்பருப்பில் தான் செய்தேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி