ஆலூ டிக்கியா

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 15
வாழைக்காய் - 6
நெய் - 125 கிராம்
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
ரொட்டித்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
இதனை வாழைக்காயோடு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் உருளைக்கிழங்கு விழுது மற்றும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை சிறுசிறு உருண்டைகளாக்கி வடை போல் தட்டிக் கொண்டு ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்