புளி காய்ச்சல்

தேதி: August 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி -- 3 எலுமிச்சம் பழம் அளவு
சிவப்பு வத்தல் -- 5 Nos
வெந்தயபொடி -- 1 ஸ்பூன்
பெருங்காயம் -- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1 டீஸ்பூன்
தண்ணீர் -- 1 கப்
உப்பு -- தே.அ

தாளிக்க:

கடலை எண்ணெய் -- 2 ஸ்பூன்
நல்ல எண்ணெய் -- 2 ஸ்பூன்
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு --1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு


 

புளியை நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்கவிடவும்.

வெடித்தபின் கறிவேப்பிலை போட்ட உடன் வெந்தயபொடி, பெருங்காயம் போட்டு பின் புளிதண்ணீரை ஊற்றி, தண்ணீரையும் ஊற்றி அதனுடன் உப்பு,மஞ்சள் தூள் போட்டு ஒரு கொதி வந்தவுடன் நல்ல எண்ணெய் ஊற்றி குழம்பு பதம் வந்தவுடன் இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்தல் மிளகாயை என்னங்க பண்றது கடிச்சு சாப்படவா