மாவு சட்னி

தேதி: August 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் -- 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி -- 3/4 கப் (நறுக்கியது)
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
எண்ணெய் -- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சாம்பார் பொடி -- 2 1/2ஸ்பூன்
இட்லி மாவு -- 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -- 1 ஸ்பூன்
உப்பு -- தே.அ


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி தக்காளி போடவும்.
நன்றாக பேஸ்ட் போல் வதக்கவும்.
இதனுடன் சாம்பார் பொடி,உப்பு போட்டு , 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பின் இட்லி மாவுடன் சிறிது நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். அதை கொதிக்கும் சட்னியில் ஊற்றவும். கட்டியானால் இன்னும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இறக்கும் தருவாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா நேத்து மாவு சட்னி செய்தேன்..எதிர்பாத்ததை விட நல்லாவே வந்தது...இன்னும் நிறைய்ய இதுபோல குறிப்புகளை அனுப்புங்க

ரொம்ப நன்றி

என்னுடைய குறிப்பில் உள்ள அனைத்து சட்னியுமே நன்றாகத்தான் இருக்கும். எல்லாவற்றையும் செய்து பாருங்கள் நன்றாக சாப்பிட்டு பதில் எழுதுங்கள்.

நான் இன்னைக்கு மாவு சட்னி பண்ணேன். ரொம்ப நல்லா டேஸ்டியா இருந்துச்சு. சூப்பர் சுபா. தேங்க்ஸ்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷினி,
இப்ப தான் பா உங்க மெசேஜ் பார்த்தேன்.
ரொம்ப நன்றி .
நல்லா இருந்தா சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
இன்னும் மற்ற குறிப்புகளை செஞ்சி பாருங்க. பதில் தருக!!

Hi subha,

மாவுச் சட்னி மிகவும் நன்றாக இருந்தது.
regards,
suji

நன்றி
மீண்டும் மீண்டும் சாப்பிடத்தோன்றும் ஒன்றில் இடையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸி தேவையில்லை என்பதால்..

சுபா மாவு சட்னி செய்தேன்.சூப்பர்.எனக்கும் அவருக்கு ரொம்ப பிடிச்சுது.இனிமே அடிக்கடி செய்வேன்.ருசிக்கு ருசியும் ஆச்சு மிக்சி அலம்பற வேலையும் இல்ல.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுபா நேற்று இரவு மல்லிகைப்பூ இட்லி, முறு முறு தோசை தொட்டுக்கொள்ள என்ன தெரியுமா? மாவு சட்னி. எங்கள் வீட்டு நாக்கு நீண்ட தேவதைகளுக்கு (என்னையும் சேர்த்து தான்) ரொம்ப பிடிச்சுது. நான் அடுப்பை அணைத்து விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத்தூவி மூடி வைத்து விட்டு பரிமாறும் போது கிளறி விட்டு பரிமாறினேன். சூப்பராக இருந்தது.
அன்புடன்
ஜெ