உணவுப் பொருட்கள் மீந்துவிட்டால் அதை எவ்வாறு மாற்றுவழியில் உபயோகிப்பது ?

உப்புமா மீந்துவிட்டால் பஜ்ஜி மாவை கலந்து உப்புமாவை சிறிய உருண்டைகளாக உருட்டி முக்கி எடுத்து போண்டாவாக USE பண்ணலாம்

சப்பாத்தி மீந்துவிட்டால் -- ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான பாலில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து ஊற்றவும்.
சப்பாத்தியை பிச்சி பிச்சி, பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஊறிய சப்பாத்தியை சாப்பிட நன்றாக இருக்கும்.

சப்பாத்தி மீந்துவிட்டால் பொடித்த வெல்லம்+தேங்காய் துருவியது சேர்த்து மிக்ஸியில் பொடித்து அதனுடன் நெய்யில் வருத்த முந்திரி பருப்பை சேர்த்து சிறு உறுண்டைகளாக பிடித்து சுவைத்தால் வடநாட்டில் செய்யும் சூர்மா லாடுவை போல் சுவை ஆகிவிடும்

சிக்கன் பொரித்தது மீந்து விட்டால் அதனை மிக்ஸியில் பொடித்து வேகவைத்த உருளைக்க்கிழங்கு சேர்த்து வடை போல் தட்டி முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்சில் பிரட்டி சிரிது எண்ணையில் பொரித்து பரிமாரவும்

புட்டு மீந்து விட்டால் சிரிது வெல்லம்+சோம்பு பொடி+பழம் சேர்த்து சாப்பிட்டால் புட்டு பறந்து விடும்

அறைத்த உழுந்து மீதமானால்(வெளியே கொட்டிவிடலாம் என்பதை தவிர) என்ன செய்வது?

இன்னும் கொஞ்சம் மையாக அரைத்து வெங்காயம்+மிளகு+உப்பு_பச்சை மிளகாய்+வேப்பிலை சேர்த்து உழுந்து வடை பொரிக்கலாம்...`

Hi,
மாவு கட்டியாக இல்லை .வடை செய்யமுடியாது

அப்ப கொஞ்சம் எண்ணையை தவாவில் போட்டு தோசையாக ட்ரை பன்னி பாக்கலாம்.நான் முடிஞ்ச வேர எதாவது add பன்னிட்டு ட்ரை பன்னிட்டு சொல்ரேன்

ஹாய் ரோஸ்,
எப்படியிருக்கீங்க? வெல்லத்தை பொடியாக்கி, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அரைத்த உளுந்துடன் சேர்க்கவும். 2 ஏலக்காய் நசுக்கிப் போட்டு, 1/2 மூடி தேங்க்காயை பாலெடுத்தோ அல்லது அப்படியே நைசாக அரைத்தோ சேர்த்து, உளுந்து வாசனை போக கொதிக்க வைத்தால், மணக்கும் உளுத்தங்கஞ்சி ரெடி.
எவ்வளவு அரைத்த உளுந்து உள்ளதோ, (மாவு 1 தம்ளர் என்றால் 1/4 தம்ளர் பச்சரிசி) பச்சரிசி ஊறவைத்து நைசாக அரைத்து, கலந்து, சிறிது சிறிதாக கிள்ளி, எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் பாலில் ஊற வைத்தால் சுவையான பால் பணியாரம் ரெடி.
உளுந்து விக்கற விலையில ஏன் கீழே கொட்ட வேண்டும்? செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க. இன்னும் இது போல் நிறைய செய்யலாம். பிறகு ஒவ்வொன்னா பார்ப்போம்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்