திராட்சை அல்வா

தேதி: August 12, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பன்னீர் திராட்சை -- 1/2 கிலோ
சர்க்கரை -- 300 கிராம்
ரவை -- 200 கிராம்
முந்திரி -- தே.அ
நெய் -- 200 கிராம்


 

ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து , கொரகொர வென அரைக்கவும்.
முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்.
பன்னீர் திராட்சை பழத்தை நன்றாக பிசைந்து ஜூஸ் எடுக்கவும். ஜூஸை வடிகட்டி, ஜூஸை நன்றாக கொஞ்சம் திக் ஆகும் வரை கொதிக்கவிடவும்.
அதனுடன் அரைத்த ரவையை சேர்த்து கிளறியபின் சர்க்கரையை சேர்த்து நன்றாக கைவிடாமல் சிம்மில் வைத்து கிளறவும்.
பின் நெய் ,முந்திரி பருப்பு சேர்த்து சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்