மாங்காய் வத்தல் குழம்பு:

தேதி: August 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மாங்காய் வத்தல் - 8 துண்டுகள்
சுண்டைக்காய் வத்தல் - 12
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 10
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி
தேங்காய்துருவல் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

மாங்காய் வத்தலை 15 நிமிடம் சுடுத் தண்ணீரில் ஊற விடவும். தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் கால் கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். சுண்டை வத்தலை போட்டு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும்.
புளியை கரைத்து ஊற்றி அரைத்த தேங்காயை சேர்க்கவும். பின்னர் மாங்காய்வத்தல், உப்பு போடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும் வெல்லத்தை போட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்