தால் கிரேவி

தேதி: August 12, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு -- 1 1/2 கப்
வெங்காயம் -- 1 கப்
தக்காளி -- 1 கப்
கடுகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு -- ஒரு டீஸ்பூன்
பட்டை -- 1 என்னம்
கிராம்பு -- 4 என்னம்
எண்ணெய் -- 2 ஸ்பூன்
உப்பு -- தே.அ
கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
தனியா பொடி -- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் பொடி -- 2 ஸ்பூன்


 

துவரம்பருப்பை 10 நிமிடம் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு பின் கடுகு,உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
இதில் வெங்காயம் போட்டு 3 நிமிடம் நன்றாக வதக்கவும்.
இதனுடன் தக்காளியையும் சேர்த்து பேஸ்ட்டாக வதக்கவும்.
இப்பொழுது தனியா பவுடர், கரம்மசாலா பவுடர்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக வேகவைத்த துவரம்பருப்பையும் உப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி,கொதித்தபின் இறக்கி பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா உங்களுடைய பல குறிப்புகள் செய்வதற்கு ஈஸி ஆகவும் சுவையாகவும் உள்ளன அதி இந்த தால் கிரேவியும் ஒன்று
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்