கொடுவா கருவாடு ரசம்

தேதி: August 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொடுவா கருவாடு - 4 சிறு துண்டுகள் (கழுவிக்கொள்ளவும்)
முழு மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் -1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
இஞ்சி - 3 அங்குலம்
பச்சை மிளகாய் 3
காய்ந்த மிளகாய் - 3
தக்காளி - 2 பெரியது
பூண்டு - 10 பல் (தோல் உரிக்காமல்)
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - 1 கோப்பை
கறிவேப்பிலை 2 கொத்து
எண்ணை - 2 மேசைக்கரண்டி


 

இஞ்சி,ப.மிளகாய்,முழு மல்லி, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தக்காளி,ம.இலை 1/2 கப், பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீரில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும். சட்டியில் எண்ணை ஊற்றி கருவாடை சற்று வறுத்து அந்த சட்டியிலேயே ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள எண்ணையில் கா.மிளகாய், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி, கரைத்து வைத்த ரசத்தை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் மல்லி இலையை தூவி இறக்கவும்.


இதே செய்முறையில் கருவாட்டிற்குப் பதில் கோழியை சிறு சிறு துண்டுகளாக வெட்டியும் சமைக்கலாம். அல்லது வெறும் முட்டை மட்டும் உடைத்து ஊற்றியும் சமைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்