அதிரடி கூட்டு

தேதி: August 16, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் -- 100 கிராம்
முட்டைகோஸ் -- 150 கிராம்
வெங்காயம் -- 100 கிராம்
பச்சை மிளகாய் -- 2 என்னம்
தக்காளி -- 100 கிராம்
துவரம் பருப்பு -- 100 கிராம்
மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -- 2 டீஸ்பூன்
தனியாதூள் -- 3 டீஸ்பூன்
இஞ்சி -- சிறிது
பூண்டு -- 4 பல்
எண்ணைய் , உப்பு -- தே.அ
கடுகு, உளுத்தம்பருப்பு -- தாளிக்க தேவையான அளவு


 

காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பையும் நன்றாக கழுவும்.
குக்கரில், காய்களையும்,பருப்பையும் ஒன்றாக போடவும்.
இதனுடன் பச்சை மிளகாய்,தக்காளி,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியாதூள் ஆகியவற்றை போடவும் .
இஞ்சி,பூண்டுயை தட்டிப்போடவும்.
உப்பு தேவையான அளவு போட்டு, காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
3 விசில் வந்ததும் இறக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து ஊற்றவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்னங்க சுபா உங்க சமையல் குறிப்பு பேரைக் கேட்டாலே சும்மா அதிருது. எல்லா குறிப்புமே நல்லா இருக்கு.

ரொம்ப நன்றி
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்.
உங்கள் திறமையை பார்த்து ஒரே ஆச்சர்யம்.
நம்ம ஊர் இல்லாம வேற நாட்டில் இருந்து கொண்டு வேலைக்கும் போய் கொண்டும் குழந்தையை பார்த்துக்கொண்டும் அறுசுவையை கலக்குறீங்க.
நான் ஹவுஸ் ஒயிஃப் பாக இருந்தும் என்னால் சரியாக கான்சன்ட்ரேஷன் பண்ணமுடியவில்லை.
ரகசியம் என்ன?
எனக்கு சமையல் (கணவருக்காக special ஆக சமைக்க)மிகவும் பிடிக்கும்.
ஏதாவது புதிதாக சமைத்துக் கொண்டே இருப்பேன்.
நன்றி

தேவான்னே கூப்பிடுங்க. மேடமெல்லாம் வேணாம். ஒரு ரகசியமும் இல்ல. நான் சமையல் குறிப்பு எழுதியே நாளாச்சு. முதலில் சமையல் குறிப்பு மட்டும்தான் எழுதணும்னு நினைச்சேன். இப்ப மன்றத்தில் நிறைய எழுதிடறதால அது அப்படியே நின்னுடுச்சு. நீங்க எத்தனை ரெசிப்பி எழுதறீங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கும். அதிலேயேதான் உங்க திறமை தெரியுதே. ஆனால் ரொம்ப தன்னடக்கமா சொல்றீங்க. எனக்கும் சமைக்க அதுவும் கணவருக்கு பிடிச்சதா மட்டும் சமைக்க ரொம்ப பிடிக்கும். அவருக்கும் என் சமையல்தான் ரொம்ப பிடிக்கும்.

Hi Deva Madam ,
I am from abudhabi . may i know where are u staying .I need ur help.

by
Sree