தயிர் கத்தரிக்காய் (தஹி பைங்கன்)

தேதி: August 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

இஞ்சி , பூண்டு விழுது -- 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
தனியா தூள் -- 1 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் -- 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1 டீஸ்பூன்
தயிர் -- 1கப்
கடலை மாவு -- 2 ஸ்பூன்
வெங்காயம் -- 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 4 (நீளமாக கீறியது)
கொத்தமல்லி -- ஒரு கைப்பிடி அளவு
உப்பு -- தே.அ
எண்ணெய் -- 3 ஸ்பூன்

தாளிக்க :
சிவப்பு மிளகாய் -- 3 என்னம் (இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்)
பெருங்காயத்தூள் -- 1 டீஸ்பூன்
முழு சீரகம் -- 1 டீஸ்பூன்


 

முதலில் கத்தரிக்காயை நீள நீளமாக வெட்டவும்.
கத்தரிக்காயுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இது 5 நிமிடம் ஊற வேண்டும்.
வாணலியில் எண்ணெய் பாதி அளவு ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லியை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
இதனுடன் கத்தரிக்காய் மசாலாவை நன்றாக வதக்கவும்.
வதக்கிய கத்தரிக்காயுடன் கடலை மாவு,தயிரை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்து குழம்பு பதம் வந்தவுடன் இறக்கி விடலாம்.

மேலும் தாளிக்க கொடுத்த பொருட்களை மீதம் உள்ள எண்ணெயில் தாளித்து தஹி பைங்கனில் கொட்டவும்.
ரெடி


மேலும் சில குறிப்புகள்