வெண்ணைய் சிக்கன் மசாலா

வழங்கியவர் : Subha Jayaprakash -- Dubai
தேதி : Sat, 18/08/2007 - 18:10
ஆயத்த நேரம் : 7 நிமிடம்
சமைக்கும் நேரம் : 35 நிமிடம்
பரிமாறும் அளவு :
- கோழி -- 1 கிலோ (சிறிதாக துண்டாக்கியது)
- கெட்டித்தயிர் -- 1கப்
- கரம் மசாலா தூள் -- 1 டீஸ்பூன்
- பூண்டு , இஞ்சி விழுது -- 1 டீஸ்பூன்
- வெண்ணைய் -- 50 கிராம்
- தக்காளி -- 4 என்னம்
- மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -- 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் -- 2 ஸ்பூன்
- தனியா தூள் -- 2 ஸ்பூன்
- சர்க்கரை -- 1/2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு -- 25 கிராம்
- உலர்ந்த திராட்சை -- 25 கிராம்
- உப்பு , எண்ணைய் -- தே.அ
- தயிர், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது,உப்பு இவற்றை கறியுடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- இதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- வேறோரு வாணலியில் வெண்ணெய், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், மற்றும் தக்காளி சாஸ், சர்க்கரை, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை முதலியவற்றை சேர்த்து கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
- எண்ணெய் பிரியும் சமயத்தில் வறுத்த கோழியை இதில் போட்டு நன்கு கிளறி இறக்கினால் சுவையான வெண்ணெய் சிக்கன் மசாலா தயார்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
29 நிமிடங்கள் 18 sec முன்பு
32 நிமிடங்கள் 34 sec முன்பு
ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு