கடலை கறி

தேதி: August 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருப்பு கொண்டைக் கடலை - 1 கப்
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 2
தேங்காய் (துருவியது) - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணை - சின்ன குழிக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

கருப்பு கொண்டைக்கடலையை முந்தைய இரவில் ஊற வைத்துக் கொள்ளவும் .
கொண்டைக் கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடலை வேகவைத்த தண்ணீரை வடித்து வைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், அதில் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன், மிளகாய்த் தூள், சோம்புத்தூள் சேர்க்கவும்.
பின்னர் வேகவைத்த கடலை மற்றும் தேங்காய் பால், கடலை வேகவைத்த தண்ணீர்,
உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு பதத்திற்கு வந்தவுடன் தீயை அணைத்து விடவும்.


ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்