உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கார்ன் பேட்டீஸ்

 


தேவையானப் பொருட்கள்

  • பிஞ்சு சோளக்கதிர் -- 4
  • பெரிய வெங்காயம் -- 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் -- 4
  • பூண்டு -- 10 பல்
  • பால் -- 1 டம்ளர்
  • மைதா -- 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் -- 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு -- தே.அ
  • கொத்தமல்லி தழை -- சிறிது

செய்முறை

  • சோளத்தை வேகவைத்து முத்துக்களை உதிர்க்கவும்.
  • வாணலியில் வெண்ணைய் போட்டு உருகியதும், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி அதோடு மைதாவை சேர்த்து கிளறவும்.
  • இந்த கலவையில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, கடைசியில் சோள முத்துக்களைச் சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
  • சோள பட்டை (சோகை)யை சுத்தம் செய்து அதன் நடுவில் ஒரு கரண்டி சோளமசாலா கலவையை வைத்து அதன் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இருபுறமும் மடித்து வைக்கவும்.
  • இதை காய்ந்த தோசைக்கல்லில் போட்டு சோள பட்டை பொன்னிறமாகும் வரை திருப்பி திருப்பி சூடாக்கி எடுக்கவும்.
  • பட்டையை நீக்கி விட்டு சுட சுட சாப்பிடலாம்.

குறிப்பு:

சோகையின் மணத்தோடு கார்ன் பேட்டீஸின் சுவை சூப்பராக இருக்கும். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகம்.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 நபர்களுக்கு 15 நிமிடம் 25 நிமிடம்
random food image


comments