தேவையானப் பொருட்கள்
- பிஞ்சு சோளக்கதிர் -- 4
- பெரிய வெங்காயம் -- 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 4
- பூண்டு -- 10 பல்
- பால் -- 1 டம்ளர்
- மைதா -- 2 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் -- 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு -- தே.அ
- கொத்தமல்லி தழை -- சிறிது
செய்முறை
- சோளத்தை வேகவைத்து முத்துக்களை உதிர்க்கவும்.
- வாணலியில் வெண்ணைய் போட்டு உருகியதும், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி அதோடு மைதாவை சேர்த்து கிளறவும்.
- இந்த கலவையில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, கடைசியில் சோள முத்துக்களைச் சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
- சோள பட்டை (சோகை)யை சுத்தம் செய்து அதன் நடுவில் ஒரு கரண்டி சோளமசாலா கலவையை வைத்து அதன் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இருபுறமும் மடித்து வைக்கவும்.
- இதை காய்ந்த தோசைக்கல்லில் போட்டு சோள பட்டை பொன்னிறமாகும் வரை திருப்பி திருப்பி சூடாக்கி எடுக்கவும்.
- பட்டையை நீக்கி விட்டு சுட சுட சாப்பிடலாம்.
குறிப்பு
சோகையின் மணத்தோடு கார்ன் பேட்டீஸின் சுவை சூப்பராக இருக்கும்.
தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5 நபர்களுக்கு |
15 நிமிடம் |
25 நிமிடம் |