புரோக்கோலி பொரியல்

தேதி: August 21, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரோக்கோலி - 500 கிராம்
வெங்காயம் - பாதி பாகம்
இஞ்சி - அரை அங்குலம்
பச்சை மிளகாய் - 2
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பாசிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - ஒன்று
தேங்காய்ப்பூ - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

புரோக்கோலியை சின்னதாக உதிர்த்து கழுவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடிதாக நறுக்கவும். பெருஞ்சீரகத்தை நுனுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு பொரிய விடவும். அதில் காய்ந்த மிளகாய் போடவும். மேலும் உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்க்கவும்.
பின்பு இஞ்சி போட்டு வதக்கிய பின்பு அதில் பச்சை மிளகாய் வதக்கி வெங்காயத்தை சேர்க்கவும்.
பிறகு பெருஞ்சீரகத்தை சேர்த்து வதக்கிய பின்பு புரோக்கோலியை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
மேலும் அதில் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சுண்டும் தருவாயில் தேங்காய்பூவை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi, this receipe is very tasty.Thanks for sharing.

ரசியா இன்று உங்கள் புறோக்கோலிப் பொரியல் செய்தேன். நல்ல சுவையாக இருந்தது. இஞ்சி சேர்த்தது புதுவிதமாக இருந்தது. நான் எப்பவும் புரோக்கோலியை அவித்துக் கொடுப்பேன் அல்லது ஸ்பினாஜ் கீரையுடன் சேர்த்துச் செய்வேன். இன்று உங்கள் முறையில் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

புரோக்கோலி பொறியல் செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி அதிரா!

உங்கள் முறைப்படி இஞ்சி போட்டு செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.சத்தான பொரியலுக்கு நன்றி ரசியாக்கா.

உனது பின்னூட்டம் எல்லாம் பார்த்து சந்தோசத்தில் எனக்கு மூச்சு முட்டுது!ஏதோ அதிராவின் புன்னியத்தில் எனது குறிப்புகள் தூசு தட்ட பட்டு மேல் வந்துள்ளது அதிராவிர்க்கும் எனது நன்றி!!!

ரஸியா அக்கா

அக்க சுகமா?பிள்ளைகள் சுகமா, இங்கு நாங்கள் சுகமே
இன்று உங்களின் இந்த புரோக்கலி பொறியல் செய்தேன் மிகவுன்ம் நன்றாக வந்தது நான் பொதுவாக கடுகு, உ.ப்ருப்பு , வினிகர் ஊற்றிதான் செய்வேன் இது மிகவும் அருமையான் டேஸ்ட் அக்கா

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அன்புள்ள மகா,நாங்கள் சுகம,உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?ப்ரோக்கலி பொறியல் நல்லா வந்ததாக தெரிவித்துள்ளீர்கள்,ரொம்ப நன்றிமா!

அன்பு ரஸியா புரோக்கலி பொரியல் செய்து சாப்பிட்டோம். மிகவும் நன்றாக உள்ளது. இஞ்சி, பாசிபயறு,சோம்பு எல்லாம் போடுவது மிகவும் நன்றாக உள்ளது.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி அக்கா

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த புரோக்கோலிப் பொரியலின் படம்

<img src="files/pictures/aa271.jpg" alt="picture" />

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த புரோக்கோலிப் பொரியலின் படம்

<img src="files/pictures/aa286.jpg" alt="picture" />

ஜலீலாக்கா செய்த ப்ரோக்கலி பொறியல் பார்க்கவே அழகாக இருக்கிறது சுவைய்யும் நல்லா தான் இருக்கும்!

ப்ரோக்கோலி பொறியல் செய்து,படமும் எடுத்து உற்ச்சாக படுத்தினதற்க்கு!ரொம்ப நன்றி!

what means by ப்ரோக்கலி வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்