மஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி)

தேதி: August 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஷ்ரூம் - 1 கப்
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை - 2
கிராம்பு - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பூன்டு - 2 பல்
எண்ணை - 2 தேக்கரண்டி


 

பூண்டினை தோலுரித்துக் கொள்ள வேண்டும். பூன்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
மஷ்ரூமை நன்றாக சுத்தம் செய்து நான்காக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, சூடாக்கி பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு வெடிக்க விடவும்.
பின்னர் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய உடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் போடவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். தேவைகேற்ப உப்பு போட்டு கொதிக்க விடவும்.
சிறிது கொதித்த பின் மஷ்ரூமை போடவும். மூடி போட்டு வேக விடவும்.
மஷ்ரூம் நன்கு வெந்த பின்பு 2 முட்டையை உடைத்து ஊற்றவும். நன்றாக கிளறவும். 5 நிமிடத்திற்கு பிறகு இறக்கவும்.
சுவையான கிரேவி தயார். இதை சாதத்திற்கும், சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்