என் குழந்தை சாப்பிட,தூங்க வழிகாட்டுகளேன்,.

எனக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது.குழந்தை பிறந்ததிலிருந்து இன்று வரை ஒரு நாளைக்கு குறைந்தது 5,6 முறை வாந்தி எடுக்கிறது.முழுவதும் முழித்தே இருக்கிறது.தூங்கவே மாட்டேன்கிறது.அவனை தொட்டிலில் வைத்து ஆட்டி கொண்டே இருக்க சொல்றான்.வீட்டு வேலை செய்ய முடியவில்லை.பாத்ரூம் கூட என்னால் ப்ரியாக போகமுடியவில்லை.என் குழந்தை சாப்பிட,தூங்க வழிகாட்டுகளேன்,.

Better consult a doctor first... I'm not sure if a baby vomiting 5-6 times a day is normal!!!...

கை பொருக்கும் சூட்டில் வெண்ணிரில் குளிக்க வைத்து வயிரு நிரய பால் கொடுத்தால் குழந்தை நன்கு தூங்குவான். உஙகளது சாபாட்டீல் துவரம் பருப்பு தவிர்க்கவும் . தண்ணிர் நிறைய குடிக்கவும். காளை , மாலை போனிஸான் கொடுக்கவும். ரொம்ப அழுதால் கோளிக் எய்ட் ட்ரொப்ஸ் கொடுக்கலாம்

முதலில் டாக்டரிடம் ஆலோசனை கேக்கவும் ஒருபிரச்சனையும் இல்லை என்றல் நீங்கள் தய்பால் கொடுப்பவராக இருப்பீர் வாயு சம்பந்தாமான சாப்பட்டை தவிர்க்கவும் அடுத்து குழந்தையை 2 பக்கமும் அனைத்து சூடாக படுக்கவிடவும் எனக்கும் என் மகளாள் இதே பிரச்சனை தான் நானும் பெரியவர்கள் சொல்லி இப்படிதன் செய்தேன் அவள் ந்ல்ல தூங்குவள்.

ஹலோ ரம்பா, வாழ்த்துக்கள்.....உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் அறுசுவையின் சார்பாக வாழ்த்துக்களும், குழந்தைக்கு ஆசீரும் கூறுகின்றேன்.என்னங்க் நீங்க குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து சாவகாசமாக வந்து எங்களிடம் குழந்தைப் பிறந்த செய்தியை கூறுகின்றீர்கள்..........இங்கு அறுசுவையில் எத்தனை எத்தனை அத்தைகள், பாட்டிகள்,சித்திகள், பெரியம்மாக்கள், மற்றும் அன்பே உருவான தாய் மாமன் உட்பட இத்தனை பேர்கள் உள்ளதை மறந்து விட்டீர்களா!! பரவாயில்லை இப்பொழுது தான் கூறிவிட்டீர்களே மிகவும் சந்தோசமாக உள்ளது. குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பெயர் வைத்து விட்டீர்களா? குழந்தை பிறக்கும் பொழுது இருந்த எடை எவ்வளவு போன்ற விசயங்களை பிரியம் இருந்தால் கூறவும்.

பிள்ளைப் பேறு என்பது ஒரு பெண்ணின் மறு ஜென்மம் என்று கூறுவார்கள்.குழந்தை தாய் பால் குடிப்பதாக இருந்தாலும் சரி, புட்டி பால் குடிப்பதாக இருந்தாலும் சரி முதலில் உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம். ஆகவே சமையல் உட்பட வீட்டு வேலைகளுக்கு மற்றவர்களின் உதவியை கட்டாயம் நாடி இந்த வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்ச காலத்திற்கு நன்கு ஓய்வெடுக்கவும்.ஆகவே முதலில் உங்கள் நலத்திற்க்கு அதிக அக்கரை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு குழந்தை வளர்ப்பில் ஒரு பயமும் இல்லாமல் தைரியமாக குழந்தையை வளர்க்கலாம்.

ஒரு குழந்தையின் பரிபூரண ஆரோக்கியம் என்பது அது முற்றிலும் அந்த தாயின் ஆரோக்கியம் மற்றும் அவளின் அருகாமையை தான் சார்ந்தது என்று கூறுவேன். அதிலும் அந்த குழந்தை தாய் பால் குடிப்பதாயிருந்தால் அது தாயின் மனநிலை, அவளின் உறக்கம், மற்றும் அவள் உண்ணும் உணவு ஆகியவற்றிலிருந்து தான் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகின்றது ஆகவே குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வேலை செய்கிரேன் பேர்வழி என்று கூறாமல் எந்த நேரமும் குழந்தையின் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். சகோதரி kajana கூறியதுப் போலவே தாயின் அரவணைப்பு ஒன்றில் தான் குழந்தை பாதுகாப்புணர்வுடன் சுகமாக தூங்கும் என்பது முற்றிலும் உண்மை அதையே செயல் படுத்தும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் குழந்தை வாந்தி எடுப்பதை பார்த்து பயப்பட வேண்டாம். இது ஒரு தற்காலிக பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.பால் கொடுத்த பிறகு குழந்தையை உங்கள் தோளின் மீது சாய்த்துக் கொண்டு ஏப்பம் விட உதவி செய்தீர்களானால் பாலுடன் சென்ற காற்று வெளியேறிவிடும். ஏப்பம் விடும் வரை குழந்தை தோளின் மீதே இருக்கட்டும் மெதுவாக தட்டி உதவிச் செய்யுங்கள்.இவ்வாறு ஒவ்வொரு முறையும் பால் கொடுத்தவுடன் செய்வீர்களானால் அடிக்கடி வாந்தி வருவது குறைந்து விடும்.

சுடுவான் அல்லது வசம்பு கேள்விபட்டுள்ளீர்களா? நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அதை நல் விளக்கு அல்லது அடுப்பில் கூட அதனை சுட்டு பாலடையில் தாய் பாலை சிறிது பிச்சி எடுத்து அதில் சுடுவானின் சுட்ட பகுதியை மட்டும் குழைத்து குழந்தையின் நாக்கில் அல்லது தண்ணியாக குழைத்து வாயில் ஊற்றி விடுங்கள். குழந்தையின் அஜீரண சம்பந்தமான அனைத்து பிரச்சனையும் போய்விடும். பயப்பட வேண்டாம் தினமும் ஒரு வேளை கட்டாயம் கொடுக்கவும். சகோதரி Nangai அவர்கள் கூறியிருப்பதுப் போல் போனிசென் அல்லது கிரேப் வாட்டர் கூட தினமும் கொடுக்கலாம், இவைகளால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் கூட வராது.

சகோதரி Dsen னின் ஆலோசனையைப் போல், என்னச் செய்தும் வாந்தி நிற்கவில்லை என்றால் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையை நாடுவதே சிறந்தது ஒகேவா. மேலும் இதில் உங்களின் மனநிலை, குழந்தையின் வளர்ச்சி, அதில் கணவரின் பங்கு என்று எல்லாவற்றையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

If the vomitting comes with force, it might be due to reflection. You may see the doctor and get medicine for that. It is a common probelm for the babies.

மேலும் சில பதிவுகள்