கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?

<table width="98%"><tr><td align="center">
</td></tr></table>
<br />
அறுசுவை உறுப்பினர்கள், வருகையாளர்களின் வேண்டுகோளினை ஏற்று, அறுசுவையில் மகளிருக்கென சிறப்புப் பகுதி ஒன்று வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பகுதியில் சமையல் அல்லாத மற்ற பல விசயங்கள் இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.
<font color="#900000"><b>
அழகு குறிப்புகள்
கைவினைப்பொருட்கள் தயாரிப்பு
தையற்கலை
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
ஆடை அலங்காரம்
குழந்தை வளர்ப்பு
குடும்ப பராமரிப்பு..
</b></font>
இப்படி இன்னும் ஏராளமான பகுதிகள் இணைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளையும் ஒரே நாளில் கொண்டு வருவது என்பது சற்று சிரமமானது. ஒவ்வொன்றாக விரைவில் சேர்க்கவுள்ளோம். இதில் கதை, கவிதை, கட்டுரை பிரிவுகளுக்கு ஆர்வம் உள்ள நேயர்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளிலும் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வழக்கம்போல் கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்க் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது நேரடியாக feedback at arusuvai.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.

<b>விதிமுறைகள்:
</b>
1. படைப்புகள் தங்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருந்தோ, தளங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. உங்களது சொந்த படைப்புகள் என்றாலும், வேறு எந்த ஊடகத்திலும் அவை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
3. படைப்புகளின் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நபரையோ, அமைப்புகளையோ குறை கூறுவதாக இருக்கக்கூடாது.
4. படைப்புகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
5. படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.
6. நிராகரிக்கப்பட்ட படைப்புகளை திரும்ப அனுப்புதல் இயலாது. ஆகவே, எந்தவொரு படைப்பையும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பவும்.
7. படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
8. படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கே கேள்விகள் எழுப்பலாம்.

அன்புடன்
பாபு

நேயர்களுக்கு,

சிறிது காலமாக பேச்சில் மட்டும் இருந்த கவிதைப் பகுதியை தற்போது கொண்டு வந்திருக்கிண்றோம். இதில் வாரத்திற்கு ஒரு முறை புதிய கவிதைகள் சேர்க்கப்படும். இதற்கு தற்காலிகமாக முகப்பு பக்கத்தில் ஒரு லிங்க் கொடுத்துள்ளோம். வெகுவிரைவில் சிறப்பு பக்கம் தொடங்கப்பட்டவுடன், அதில் இந்த பிரிவுகள் சேர்க்கப்படும்.

உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளை அனுப்புவதற்கு முன்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

<a href="node/5618" target="_blank"> கவிதைப் பூங்கா </a>

நடு இரவு, பின்னிரவு என விழித்திருந்து ஓயாமல் உழைக்கும் அட்மின் அண்ணாவின் அறுசுவை மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். இப் புதிய பகுதி பலருடைய கவித்திறமையை உலகுக்கு காட்டும் என்பதில் ஐயமில்லை.
சுபா, விது, நூர்ஜஹான்,டெய்ஸி அனைவருடைய கவிதைகளும் அருமை.

கவிதைகள் அனுப்புவோர் கவனத்திற்கு,

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கவிதைப்பூங்கா பகுதிக்கு நிறைய சகோதரிகள் கவிதைகள் அனுப்பியுள்ளனர். அதற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த சில விசயங்களை இங்கே அடிகோடிட்டு காட்ட விரும்புகின்றேன்.

இந்த கவிதைப் பகுதி உங்கள் திறனை உலகிற்கு காட்டும் ஒரு பகுதி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த பகுதியில் இடம்பெறும் கவிதைகள் நல்ல கவிதைகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த புதிய பகுதி வெற்றி பெறும். எனவே நல்ல கவிதைகளை தேர்ந்தெடுக்கவென மூவர் அடங்கிய குழு ஒன்று அமைத்திருக்கின்றோம். அதில் ஒருவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் & கவிஞர், மற்றொருவர் கவிஞர் & சொற்பொழிவாற்றுபவர், மூன்றாவதாக நான். என்னால் ஓரளவிற்கு நல்ல கவிதைகளை அடையாளம் காண முடியும் என்பதாலும், சிலசமயம், கவிதைகளைத் தாண்டி கொடுப்பவரை உற்சாகப்படுத்துவதற்கு சில தேர்வுகள் அவசியம் என்பதாலும் அந்த குழுவில் நானும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

எல்லா கவிதைகளையும் வெளியிடுதல் கடினம். அவை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெளியிடுவோம். வெளியிட இயலாத கவிதைகளை திருப்பி அனுப்பவதிலும், வெளியிட இயலாது என்ற தகவலைத் தெரிவிப்பதிலும் எங்களுக்கு தர்மசங்கடம் இருப்பதால், கவிதை வெளிவரவில்லையெனில் அது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற தகவலை தாங்கள் அறிந்து கொள்ளவும்.

கவிதைப் பகுதியில் தினமும் கவிதைகள் சேர்க்க இயலாது. நடுவர்கள் பார்த்து, தேர்ந்தெடுத்து பின்னர் வெளியிட வேண்டியிருப்பதாலும், தற்போது குறைந்த அளவு கவிதைகளே நேயர்களிடம் இருந்து வருகின்ற காரணத்தாலும், வாரம் ஒரு முறை இந்த பகுதியில் கவிதைகள் சேர்க்கவுள்ளோம். பின்னர் இந்த பகுதியின் வளர்ச்சி விகிதம் அறிந்து இதனை மாற்றிக்கொள்ளலாம்.

எது நல்ல கவிதை என்பதற்கு விதிகள் எதுவும் இல்லை. சில கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கும். சில கவிதைகள் பிடிக்காது. எனக்குப் பிடித்தது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். எனவே, இந்த நல்ல கவிதைகள் விசயத்தில் தீர்வு கொடுப்பது மிகவும் சிரமம். இங்கே அறுசுவையை பொறுத்த வரை நடுவர் குழு தீர்மானிப்பதே வெளியிடுவதற்கு ஏற்புடைய கவிதைகள். யாருடைய கவிதைகளும் வெளியிடப்படவில்லையெனில் ஏன் என்று கேள்வி வேண்டாம். அந்த கவிதையை விட என் கவிதை நன்றாக இருக்கிறது.. அதை வெளியிட்டு என் கவிதையை ஒதுக்கியது எதற்கு.. ஏன் இந்த பார்ஷியாலிட்டி என்பது மாதிரியான கேள்விகள் தயவுசெய்து வேண்டாம். இங்கே அனைவரும் சமமே. சார்பு நிலை, ஓரவஞ்சனை, வேறுபாடு என்று எதுவும் கிடையாது.

இங்கே வெளியிட இயலாது என்று மறுக்கப்பட்ட கவிதைகள் நல்ல கவிதைகள் அல்ல என்ற அர்த்தம் அல்ல. அதனால் மனம் வருத்தமும் கொள்ள வேண்டாம்.

கவிதை அனுப்புவோர் ஒரு கவிதை மட்டும் அனுப்பிவிட்டு, அது வெளியான பின்பு அடுத்த கவிதை அனுப்பலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகின்றது. நிறைய கவிதைகளை அனுப்புங்கள். அதில் சிறந்தவற்றை தேர்வு செய்து வெளியிடுகின்றோம்.

அடுத்து, வெண்பா, அந்தாதி, மரபுக் கவிதைகள் போல் புதுக்கவிதைகளுக்கு என்று பெரிய இலக்கணம் இல்லை. இதுதான் புதுக்கவிதை என்று விதிகளை வைத்து சொல்வது கடினம். இது பலருக்கும் வசதியாகிவிட்டது. "நேற்று நான் கடைக்கு போய் கால் ரூபாய்க்கு கடலை மிட்டாய் வாங்கினேன்" என்ற ஒரு வரி வாக்கியத்தை உடைத்துப் போட்டு

நேற்று நான்
கடைக்கு போய்
கால் ரூபாய்க்கு
கடலைமிட்டாய் வாங்கினேன்.

என்று எழுதிவிட்டு அதை புதுக்கவிதையில் சேர்த்துவிடுகின்றனர். இது வருத்தப்பட வேண்டிய விசயம். இதுபோன்ற வசனக்கவிதைகள்(?!) கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

புதுக்கவிதை குறித்து எங்களின் எதிர்பார்ப்பு என்ன?

1. முழுக்கவிதையையும் படிக்கையில் அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். எதேனும் சம்பவங்களையோ, மன எண்ணங்களையோ வெளிப்படுத்த வேண்டும். அதில் ஒரு செய்தி இருக்க வேண்டும்.

2. கவிதைகளுக்கு வார்த்தை அலங்காரம் முக்கியம். கொஞ்சம் உவமானம், உவமேயம் எல்லாம் இருத்தல் வேண்டும்.

3. படிப்பவர்கள் கண்களை மட்டும் சேராமல், மனதிற்குள்ளும் சென்றடைய வேண்டும். படித்த பிறகு ஒரு கணம் அதைப் பற்றி யோசிக்க வைத்தல் வேண்டும்(இதெல்லாம் ஒரு கவிதையா என்று அல்ல. இது போன்ற சிந்தனை நமக்கு வரவில்லையே என்று).

4. வியக்க வைத்தல் வேண்டும். வெறுக்க வைத்தல் கூடாது.

தேர்வுகள் இல்லாமல், எல்லா கவிதைகளையும் வெளியிட்டோம் என்றால் நாளை அனுப்புபவர்களுக்கு வெறுத்துப் போய்விடும். "அங்கே என்ன குப்பையை அனுப்பினாலும் வெளியிட்டுவிடுவார்கள்" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர். எனவே இனி வரும் வாரங்களில் நடுவர் குழு தேர்ந்தெடுத்த கவிதைகள் மட்டுமே வெளியிடப்படும். அதனால், நிறைய கவிதைகள் அனுப்பி வையுங்கள்.

<b>"ஏன் எனது கவிதையை வெளியிடவில்லை?" என்று தயவுசெய்து யாரும் கேள்வி கேட்காதீர்கள். அதற்கு என்னிடம் இருந்து பதில் வராது :-) </b>

thank you for ur reply

நல்ல முடிவு. வரவேற்கிறேன்.
கவிதைப் பகுதிக்கு தேர்வாளர்கள் நிச்சயம் தேவை தான்.வெளிவந்து வெறுப்பை சம்பாதிப்பதைவிட அவற்றை வடிகட்டிவிடுதல் நலம். ஒரு கவிதை வெளிவரவில்லை என்று தெரிந்ததுமே அடுத்த கவிதையை நல்ல கவிநயத்துடன் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

any one knows what is kolly?.what is english name for kollu.

முன்பே கொண்டு வருவதாக கூறிய மற்றொரு புதியப் பகுதி. இங்கே தினமும், அன்றைய தினம் பிறந்தநாள் காணும் அறுசுவை உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும்.

பிறந்த தேதி, மாதம் சரியாக குறிப்பிட்டிராத மற்ற உறுப்பினர்கள், தங்களது profile page க்கு சென்று சரியான நாளையும், மாதத்தையும் தேர்ந்தெடுத்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். வருடம் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

<a href="birthday" target="_blank"> பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகுதி </a>

அட்மின் அவர்களுக்கு புதியதாக இணைத்துள்ள கவிதை தொகுப்பு 2 டை பார்வையிட முடியவில்லை. கிளிக் செய்தால் முதல் தொகுப்பிற்கே பக்கம் செல்கின்றது. தயவுச் செய்து சரிபார்க்கவும்.

self-confidense is the key to open the door of happiness in your life
அட்மின் அண்ணா,
கவிதை தொகுப்பு - 2ன் உள்ளே நுழைய முடியவில்லை. பங்குபெற்றோர் பெயரையும் போட்டுவிட்டீற்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேனும் செய்யுங்களேன் உடனடியாக.

self-confidense is the key to open the door of happiness in your life

லிங்க் மாற்றிக் கொடுக்காமல் விட்டுவிட்டேன். காலை 8 மணிக்குதான் படுக்கச் சென்றேன். எழுவதிலும் தாமதமாகிவிட்டது.

கவிதைப் பூங்கா என்று உள்ள பக்கத்திற்கு சென்றிருந்தீர்கள் என்றால் பார்வையிட்டு இருக்க முடியும். (கவிதைப் பூங்கா என்ற படத்தினை கிளிக் செய்தால் அந்த முதல் பக்கத்திற்கு செல்லலாம்.) இப்போது லிங்க் சரி செய்துவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். உடன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

பி.கு: எப்போது கவிதைப் பக்கம் போக நினைத்தாலும், நமது URL (arusuvai.com/tamil) கொடுத்து அதன் பிறகு kavithai என்று கொடுத்தால் போதும். அதற்கான பக்கத்திற்கு சென்று விடலாம். (www.arusuvai.com/tamil/kavithai)

மேலும் சில பதிவுகள்