கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?

<table width="98%"><tr><td align="center">
</td></tr></table>
<br />
அறுசுவை உறுப்பினர்கள், வருகையாளர்களின் வேண்டுகோளினை ஏற்று, அறுசுவையில் மகளிருக்கென சிறப்புப் பகுதி ஒன்று வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பகுதியில் சமையல் அல்லாத மற்ற பல விசயங்கள் இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.
<font color="#900000"><b>
அழகு குறிப்புகள்
கைவினைப்பொருட்கள் தயாரிப்பு
தையற்கலை
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
ஆடை அலங்காரம்
குழந்தை வளர்ப்பு
குடும்ப பராமரிப்பு..
</b></font>
இப்படி இன்னும் ஏராளமான பகுதிகள் இணைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளையும் ஒரே நாளில் கொண்டு வருவது என்பது சற்று சிரமமானது. ஒவ்வொன்றாக விரைவில் சேர்க்கவுள்ளோம். இதில் கதை, கவிதை, கட்டுரை பிரிவுகளுக்கு ஆர்வம் உள்ள நேயர்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளிலும் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வழக்கம்போல் கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்க் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது நேரடியாக feedback at arusuvai.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.

<b>விதிமுறைகள்:
</b>
1. படைப்புகள் தங்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருந்தோ, தளங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. உங்களது சொந்த படைப்புகள் என்றாலும், வேறு எந்த ஊடகத்திலும் அவை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
3. படைப்புகளின் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நபரையோ, அமைப்புகளையோ குறை கூறுவதாக இருக்கக்கூடாது.
4. படைப்புகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
5. படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.
6. நிராகரிக்கப்பட்ட படைப்புகளை திரும்ப அனுப்புதல் இயலாது. ஆகவே, எந்தவொரு படைப்பையும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பவும்.
7. படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
8. படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கே கேள்விகள் எழுப்பலாம்.

அன்புடன்
பாபு

நன்றி அண்ணா!

இது போல் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

இது போக தனியாக கவிதை எழுதி அனுப்ப வேண்டாமா? தலைப்புக்கு ஏற்ற கவிதை மட்டும் தான் இனி வெளியிடப்படுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வழக்கம்போல் மற்ற கவிதைகளையும் அனுப்பலாம். அதில் எந்த மாற்றங்களும் இல்லை. இது தனியே, ஒரு போட்டி போன்றது. :-)

நன்றி அட்மின் அவர்களே

“ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே! பாக்கறேன், மண்டபத்துல யாராவது இருந்தாங்கன்னா, எழுதி வாங்கிட்டு வர்றேன்!.

என்னது!!! நக்கீரர் இப்போ கூகிள் ஆண்டவராக அவதாரம் எடுத்துட்டாரா! காப்பி அடிச்சா கண்டு பிடிச்சு குடுத்துடுவாரா......."

சரி, நானே சொந்தமாக எழுத முயற்சிக்கிறேன், திறமைசாலிகளுடன் நானும் கலந்து கொண்டேன் என்று பெருமை கிடைக்குமே!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

//ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே! //

இதெல்லாம் நான் சொல்லவே இல்லையே.. ! :-)

ஆயிரம் பொன் எல்லாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாது. அதனால, பத்தாயிரம் காசுகள் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசா வழங்கலாம்னு யோசிக்கிறேன். அதே மாதிரி, மாதம் ஒருமுறை சிறுகதைகளுக்கு ஒரு போட்டி வைச்சு, 50,000 காசுகள் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கலாம்னும் திட்டம் இருக்கு. அதற்கு சரியான வழிவகைகளை யோசிச்சுட்டு, இன்னும் இரண்டொரு நாள்ல அறிவிக்கிறேன்.

அட்மின் அண்ணா, நான் ஒரு சிறுகதையை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். கதை நன்றாக இருந்தால் போடவும். இல்லாவிட்டால் நிராகரித்துவிடவும். போட்டால் சந்தோஷம், போடாவிட்டாலும் வருத்தமில்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அண்ணா என் பங்குக்கு நானும் ஒரு கவிதை அனுப்பி வைக்கிறேன். பாருங்கடா பொற்காசு பரிசு... சரி சரி.. வெறும் காசு பரிசுன்ன உடனே எல்லாரும் வர்றீங்களான்னு நீங்க புலம்புறது கேக்குது :-). என்னோட கவிதையின் அருமை எனக்கு நல்லாவே தெரியும். அதனால் கவலைப்பட வேண்டாம் :-). நானும் திறமை சாலிகளோடு பங்கு கொண்டேனே என்ற மன நிறைவுக்காக எழுதுகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த இழையை முகப்புக்கு கொண்டு வருவதற்காக இந்தப் பதிவு

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா... சீதாலஷ்மி, கவிசிவா கவிதை எல்லாம் எழுதுவீங்களா??? கலக்குங்க. நமக்கு படிக்க மட்டுமே தெரியும்!!! :)

அண்ணா... ஒரு சந்தேகம்... அனுப்பப்படும் கவிதைகள் எல்லாம் வெளி வருமா, இல்லை பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட கவிதை மட்டுமே வருமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா! நமக்கு வராத விஷயமாகப் பார்த்துப் போட்டி வைக்கிறாங்களே!!!
இதுக்கு எழுதுறதானா புனை பெயர்லதான் எழுத வேணும். வேற பெயர்ல வரலாம். வந்தால்... யாரும் கண்டு கொள்ளவே மாட்டாங்க என்று நினைக்கிறேன்.

வனீ, அதெப்படி 'அனுப்பப்படும்' கவிதை எல்லாம் போடமுடியும்? நான் எழுதினால்... நேரே ராக்கட் மாதிரி 'பின்'ல தான். ;))

‍- இமா க்றிஸ்

//நான் எழுதினால்... நேரே ராக்கட் மாதிரி 'பின்'ல தான்//

- என்னுடையதையும் கூட்டு சேர்த்துக்கோங்க :D

அதான் நாங்களாம் ரிஸ்கே எடுக்குறது இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்