கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?

<table width="98%"><tr><td align="center">
</td></tr></table>
<br />
அறுசுவை உறுப்பினர்கள், வருகையாளர்களின் வேண்டுகோளினை ஏற்று, அறுசுவையில் மகளிருக்கென சிறப்புப் பகுதி ஒன்று வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பகுதியில் சமையல் அல்லாத மற்ற பல விசயங்கள் இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.
<font color="#900000"><b>
அழகு குறிப்புகள்
கைவினைப்பொருட்கள் தயாரிப்பு
தையற்கலை
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
ஆடை அலங்காரம்
குழந்தை வளர்ப்பு
குடும்ப பராமரிப்பு..
</b></font>
இப்படி இன்னும் ஏராளமான பகுதிகள் இணைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளையும் ஒரே நாளில் கொண்டு வருவது என்பது சற்று சிரமமானது. ஒவ்வொன்றாக விரைவில் சேர்க்கவுள்ளோம். இதில் கதை, கவிதை, கட்டுரை பிரிவுகளுக்கு ஆர்வம் உள்ள நேயர்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளிலும் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வழக்கம்போல் கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்க் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது நேரடியாக feedback at arusuvai.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.

<b>விதிமுறைகள்:
</b>
1. படைப்புகள் தங்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருந்தோ, தளங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. உங்களது சொந்த படைப்புகள் என்றாலும், வேறு எந்த ஊடகத்திலும் அவை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
3. படைப்புகளின் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நபரையோ, அமைப்புகளையோ குறை கூறுவதாக இருக்கக்கூடாது.
4. படைப்புகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
5. படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.
6. நிராகரிக்கப்பட்ட படைப்புகளை திரும்ப அனுப்புதல் இயலாது. ஆகவே, எந்தவொரு படைப்பையும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பவும்.
7. படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
8. படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கே கேள்விகள் எழுப்பலாம்.

அன்புடன்
பாபு

அனுப்பற எல்லாமும் வெளிவராதுன்னா நான் தைரியமா அனுப்புவேனே!
வனி நான் எழுதறதையெல்லாம் கவிதை லிஸ்டில் சேர்க்க முடியாது. நானும் கலந்துக்கணும்னு ஒரு ஆசை அவ்வளவுதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அட்மின் அண்ணா!

கவிதை போட்டி முடிவுகள் என்று வரும் என ஆவலாக உள்ளது. அதை பற்றிய அறிவிப்பு எப்போது வரும்?

ஒரு ஆர்வ கோளாறு தான், தவறென்றால் மன்னிக்கவும்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இது சம்பந்தமாக பதிவு கொடுக்கத்தான் வந்தேன். அதற்குள் நிறைய பிரச்சனைகள். பலர் அறுசுவையை பார்க்க இயலவில்லை என்று வரிசையாக மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றார்கள். அதை சரி செய்ய வேண்டியதாயிற்று.

கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பு மன்றத்தில் மட்டும் வெளியாகி இருந்த காரணத்தால், நிறைய பேர் பார்வையில் அது படவில்லை என்று சொல்லி இருக்கின்றார்கள். சிலர் இப்போதுதான் தெரிய வந்தது, கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டிருக்கின்றார்கள். எனவே கவிதை அனுப்புவதற்கான கடைசி தேதியை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றோம். இந்த கவிதைப் போட்டி சம்பந்தமான அறிவிப்பிற்கு, அறுசுவை முகப்பு பக்கத்தில் ஒரு தொடுப்பும் கொடுக்கவிருக்கின்றோம்.

ஏற்கனவே கவிதை அனுப்பியவர்கள், இந்த நீட்டிக்கப்படும் கால அவகாசத்தில், ஏற்கனவே அனுப்பிய கவிதையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் செய்து அனுப்பலாம். அப்படி மாற்றங்கள் செய்து அனுப்பும் போது, ஏற்கனவே அனுப்பியதை குறிப்பிட்டு, மாற்றம் செய்த கவிதை என்பதையும் குறிப்பிட்டு அனுப்பவும். நீங்கள் கடைசியாக அனுப்பும் கவிதையே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கவிதைப் போட்டிக்கான கடைசி தேதி. 21.08.2010 - இந்திய நேரம் நள்ளிரவு 12 மணி வரை. 22 ஆம் தேதி கவிதைகள் நடுவர்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். 23 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.

thamilil eppadi ,enge ezhuthuvathu admin.enakku inaiyathalam ubayokikkath theriyaathu pa.

ரேணுகா

உங்க அறுசுவை விண்டோல கீழ தமிழ் எழுத்துதவி அப்படின்னு இருக்கும்... பாருங்க. அதைகிளிக் பண்ணி தமிழ்ல டைப் பண்ணலாம்....
அப்படி இல்லைண்ணா
http://software.nhm.in/
இந்த லிங்க் போய் இந்த software install பண்ணுங்க.. பிறகு தமிழ்ல டைப் பண்ணலாம்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மிக்க நன்றி தோழியே,

அறுசுவை உங்களை அன்போடு அழைக்கிறது.. வருக வருக..

கவிதைப்போட்டிக்கு தயாராகிவிட்டீா்களா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

போட்டிக்கான கவிதையை எங்கு எழுதி எதன் வாயிலாக அனுப்புவது? உங்கள் தோழிக்கு உதவுங்கள்.

கீழே தொடர்புக்கு போய் அதன் மூலமா கொடுக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்கள் கவிதை எழுதி arusuvaiadmin@gmail.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம் இல்லையென்றால் கீழே தொடர்புக்கு என்று உள்ளது, அதன் மூலமாகவும் அனுப்பலாம்

ஆல் தி பெஸ்ட்

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

மேலும் சில பதிவுகள்