கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?

<table width="98%"><tr><td align="center">
</td></tr></table>
<br />
அறுசுவை உறுப்பினர்கள், வருகையாளர்களின் வேண்டுகோளினை ஏற்று, அறுசுவையில் மகளிருக்கென சிறப்புப் பகுதி ஒன்று வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பகுதியில் சமையல் அல்லாத மற்ற பல விசயங்கள் இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.
<font color="#900000"><b>
அழகு குறிப்புகள்
கைவினைப்பொருட்கள் தயாரிப்பு
தையற்கலை
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
ஆடை அலங்காரம்
குழந்தை வளர்ப்பு
குடும்ப பராமரிப்பு..
</b></font>
இப்படி இன்னும் ஏராளமான பகுதிகள் இணைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளையும் ஒரே நாளில் கொண்டு வருவது என்பது சற்று சிரமமானது. ஒவ்வொன்றாக விரைவில் சேர்க்கவுள்ளோம். இதில் கதை, கவிதை, கட்டுரை பிரிவுகளுக்கு ஆர்வம் உள்ள நேயர்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளிலும் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வழக்கம்போல் கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்க் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது நேரடியாக feedback at arusuvai.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.

<b>விதிமுறைகள்:
</b>
1. படைப்புகள் தங்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருந்தோ, தளங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. உங்களது சொந்த படைப்புகள் என்றாலும், வேறு எந்த ஊடகத்திலும் அவை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
3. படைப்புகளின் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நபரையோ, அமைப்புகளையோ குறை கூறுவதாக இருக்கக்கூடாது.
4. படைப்புகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
5. படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.
6. நிராகரிக்கப்பட்ட படைப்புகளை திரும்ப அனுப்புதல் இயலாது. ஆகவே, எந்தவொரு படைப்பையும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பவும்.
7. படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
8. படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கே கேள்விகள் எழுப்பலாம்.

அன்புடன்
பாபு

"விடியலை நினைத்து உறங்கிய நீ
வெள்ளி முளைத்தும் எழாதது ஏன்"

"உறங்கும்முன் குறித்துக் கொள்ள மறந்தாயோ
நாளை மறவாமல் எழவேண்டும் என்று."
அண்ணா நீங்கள் எழுதியது சூப்பர்..........


//படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)//

நேக்கு இதுலதான் சந்தேகம்;-)

ஒங்க அன்பையும் மத்தவாளோட பாராட்டையும் விட ‘சன்மானம்’ ஒசத்தியா என்ன?

நேக்கு தெர்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

முதல் கவிதைப் போட்டிக்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் முடிவடைகின்றது. (இன்று- சனிக்கிழமை-21/08) இந்திய நேரம் நள்ளிரவு 12 மணி வரை கவிதைகள் வந்து சேரலாம்.

எதிர்பார்த்ததைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கவிதைகள் வந்து சேர்ந்துள்ளன. அறுசுவையில் அது வழக்கமான ஒன்றுதான். புதிய விசயம் ஒன்றிற்கு முதல் முறை அதிக வரவேற்பு இருக்காது :-) அடுத்தடுத்த போட்டிகளில் அதிக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

இது ஒரு நினைவுறுத்தலுக்கான பதிவு. கவிதை எழுதி வைத்து அனுப்ப மறந்தவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அனுப்பிவிடவும். :-)

கவிதைப் போட்டிக்கு கவிதைகள் அனுப்புவதற்கான கால அவகாசம் முடிவுற்றது. கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து சேர்ந்த இரண்டு கவிதைகளையும் சேர்த்து மொத்தம் 15 கவிதைகள் இந்தப் போட்டியில் இடம்பெறுகின்றன. கவிதைகள் தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, திங்கட்கிழமை முடிவுகள் அறிவிக்கப்படும்.

உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ள 15 உறுப்பினர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் கந்துக்கொண்ட 14 உறுப்பினர்களுக்கும்(எனக்கு நானே சொன்னா நல்லா இருக்காதே) வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

kavithai eppdi add pannuvathu konjsam sollunga ayya.

அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.

தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்

நான் கதை, கவிதை, படித்ததில் பிடித்தது, எழுதனும் என்று நினைக்கிறேன். நான் எப்படி பதிவு செய்வது.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

குறிப்பை கீழே தொடர்புக்கு என்ற லின்க்கை க்ளிக் பண்ணி அனுப்புங்க.

அன்புடன்
பவித்ரா

மிகவும் நன்றி, ஒரு கவிதை (நினைக்கிறேன்) , அனுப்பியிருக்கேன். , வந்ததும் சொல்லறேன்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

thankyou for your message but how to write in tamil.

கஷ்டங்கள் இல்லை என்றால் வாழ்கை ருசிக்காது....
தோல்விகள் இல்லை என்றால் வெற்றிக்கு வாய்பேது........
-அமுதநிலா

மேலும் சில பதிவுகள்