ஆவக்காய் ஊறுகாய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பெரிய மாங்காய் - ஒரு டஜன்
கடுகு - கால் ஆழாக்கு
மிளகாய்பொடி - ஒன்றரை ஆழாக்கு
உப்பு - ஒன்றரை ஆழாக்கு
நல்லெண்ணெய் - ஒன்றரை ஆழாக்கு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கொத்துக் கடலை - ஒரு பிடி


 

கடுகையும், உப்பையும், தனித்தனியாக காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயை வெயிலில் காய வைக்கவும்.
மாங்காயை விதையோடு எட்டாக அறிந்து வைத்துக் கொள்ளவும். கடுகையும், உப்பையும் தனித்தனியாக பொடித்து வைக்கவும்.
கடுகுப் பொடி, உப்புத் தூள், மிளகாய்ப் பொடி இவற்றைத் சேர்த்து நன்றாகக் பிசைந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் பிசறி வைத்த பொடியை முதலில் போட்டு அதன் மேல் மாங்காயை போட்டு அதனுடன் காயவைத்த எண்ணெயை உற்றவும்.
அதன் பிறகு மீதம் உள்ள பொடியை அதன் மேல் போட்டு மாங்காய் துண்டங்களையும் போட்டு எண்ணெயை நன்றாக ஊற்றி கலக்காமல் வைக்கவும்.
ஒரு நாள் கழித்து அதனுடன் வெந்தயத்தையும், கொத்துக் கடலையையும் போட்டுக் கிளறிவிடவும்.
தினமும் திறந்து கிளறிவிட்டு, பிறகு 4 நாட்களுக்கு ஒரு முறை வெயிலில் வைத்து எடுக்கவும்.
ஒரு சிறு கிண்ணத்தில் சிறிது சிறிதாக எடுத்து உபயோகப்படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்