எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்

தேதி: August 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பிஞ்சி கத்தரிக்காய் - 8
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 2
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
தக்காளி - ஒன்று
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லிபொடி - ஒரு தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


 

கத்திரிக்காயை வாயை கீறி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைத்துக் கொள்ளவும். பூண்டு பல்லை தோலுரித்து முழுசாக வைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும். எள்ளையும், கசகசாவையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடி பண்ணவும்.
ஒரு வாணலியில் 1/2 கப் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியை போடவும். மிளகாய்பொடி, கொத்தமல்லிபொடி போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த எள், கசகசா பொடியை போடவும். உப்பு சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதை இன்னும் கொன்சம் தெலிவாக எலுதவும்,பூண்டு எப்பொ எவ்லொ னெரம் பயன்படுதுவது என்ரு தெரிவிக்கவும்.

இதை இன்னும் கொன்சம் தெலிவாக எலுதவும்,பூண்டு எப்பொ எவ்லொ னெரம் பயன்படுதுவது என்ரு தெரிவிக்கவும்.

மாலதி அக்கா நலமா?எத்தனை பல் பூண்டு போடனும் நீங்க மேலே குறிப்பிடவில்லை,செய்முறையில் சொல்லி இருக்கீங்க,கொஞ்சம் பார்த்து சொல்லுங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நலம்தான் ரேணுகா..!! நீங்க எப்படி இருக்கீங்க?
6 பூண்டு பல் சேர்த்துங்க ரேணுகா.
ரெசிப்பியில் திருத்தம் செய்யவேண்டும். இப்ப கொஞ்சம் பிஸியாக இருக்கேன். மீண்டும் வந்து சரியாக திருத்திவிடுகிறேன்.

மாலதி அக்கா நலமா? உங்கள் குறிப்பிலிருந்து எண்ணெய் கத்தரிக்காய் வறுவல் செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மாலதி மேடம் எண்ணெய் கத்திரிக்காய் செய்தேன்,நல்ல வாசமா நல்லா இருந்தது நன்றி மேடம்.

மைதிலி..! பின்னூட்டத்திற்கு நன்றி..!!

கவி..!! இந்த எண்ணெய்கத்தரிக்காய் வறுவலில் எள் சேர்ப்பதால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
சும்மாதான் ஊர் பெயர் கேட்டிருந்தேன். பயந்துவிட்டீர்களா?
நன்றி கவி..!!

அரிசி பருப்பு சாதம், 2 ம் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.

விஜி...!! அரிசிபருப்புசாதமும், எண்ணெய்கத்தரிக்காய் வறுவலும் செய்தீர்களா? காம்பினேஷன் நல்லா இருக்கே.......
கொஞ்சமா தயிர்சாதமோ அல்லது ஏதாவது ஒரு ரைய்த்தாவோ செய்துவிட்டால் கம்ப்ளீட் ஃபுட் - ஆக இருக்கும்......
நன்றி விஜி...!!

உங்களுடைய எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் செய்தேன் நல்ல வாசமாகவும் சுவையாகவும் இருந்தது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"