பச்சை பயிறு மசாலா

தேதி: August 26, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை பயிறு - 1 கப்
மேத்தி லீஃ - 1 தேக்கரண்டி
அல்லது மேத்தி பொடி- 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை - 2
கிராம்பு - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி


 

வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பச்சபயிறை முதலில் வறுத்துக் கொள்ளவும்.பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
கழுவிய பயிறை வேக வைக்கவும். குக்கரில் 4 அல்லது 5 விசில் வரை விடலாம்.
கடாயில் எண்ணை சூடாக்கி பட்டை,கிராம்பு மற்றும் சோம்பு போட்டு வெடிக்க விடவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு,தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்,மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள் போடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.தேவைகேற்ப உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பின் வேக வைத்த பயிறை போடவும்.சற்று கிளறவும்.பிறகு மேத்தி லீஃ அல்லது மேத்தி பொடியை போடவும்.சிறிது கொதிக்க விடவும்.
திக்காக கிரேவி போல் வரும்.பிறகு இறக்கி பறிமாறலாம்.
இது மிகவும் சத்தான டிஷ். இதை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அனிதா,
நான் பச்சை பயிறு மசாலா செய்தேன். ரொம்ப வாசமா, நல்லா டேஸ்டியா இருந்தது.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ரீஹா ,
என்னொட டிஷ் செஞ்சு பாத்ததுக்கு தாங்க்ஸ்.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அனிதா

hi