ஆலோசனை தேவை

எங்களது மகளுக்கு முதல் மொட்டை போட (ஏழாவது மாதம்) முடிவு செய்துள்ளோம். அமெரிக்காவில் நாங்கள் உள்ள இடத்தில் கோவில் எதுவும் இல்லை. வீட்டில் வைத்து தான் வழிபாட்டு முறை பின்பற்ற வேண்டும். சரியான வழிபாட்டு முறைகள் தெரியவில்லை. நண்பர்கள் யாரெனும் முறை சொல்லி உதவவும். இந்து முறையில் ஏதெனும் ஒன்றை பின்பற்ற உள்ளோம். உதவி தேவை.

தோழி, உங்கள் பெயர் தெரியவில்லை. பொதுவாக அவரவர் குல தெய்வத்தின் கோவிலுக்குச்சென்று மொட்டை போடுவார்கள். இப்போது உங்களால் அது முடியாது. பரவாயில்லை. குழந்தைக்கு மொட்டை போட்டதும் குளிப்பாட்டி, புதுத்துணி போட்டு உங்கள் புகுந்த வீட்டு வழக்கப்படி வழிபாடு செய்யலாம். உங்களுக்குத்தெரிந்ததை, முடிந்ததை செய்யுங்கள். உங்களால் முடிந்த இனிப்பு செய்து நிவேதனம் செய்யுங்கள். உங்கள் பெண் எல்லா நலமும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது போன்ற கேள்விகளுக்கு புராணத்தில் விடை இருக்கிறது. சிவபெருமான் மனதில் கோவில் கட்டிய பூசலார் நாயனாரின் கோவிலுக்குச் செல்லப்போவதாக அரசனின் கனவில் வந்து சொன்னதாகச்சொல்கிறது புராணம். எனவே முறையை விட பக்தி தான் முக்கியம்.

மறக்காமல் மொட்டை என்று போடப்போகிறீர்கள் என்று எங்களுக்கும் சொல்லுங்கள். வாழ்த்த சகோதர, சகோதரிகள் தயாராக இருக்கிறோம்.

அன்புடன்
ஜெயந்தி

உங்கள் ஆலோசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மற்றும் விரிவான தெளிவான பதிலுக்கும் நன்றி ஜெயந்தி. செப்டம்பர் 9 ம் தேதி மொட்டை போட உள்ளோம்.

தங்கள் மகளுக்கு 7வது மாதம் மொட்டை போடுவதாக எழுதியிருந்தீர்கள். இது எதுவும் குடும்ப வழக்கமா? ஏனென்றால் 7 ஆம் மாதம் மொட்டை அடிப்பதைவிட 9 வது மாதத்திலோ அல்லது 1 வயதை நெருங்கும் முன்னரோ மொட்டை அடிப்பது பாதுகாப்பானதும்கூட. என் மகனுக்கு 2 வது மொட்டை, 3வது மொட்டையெல்லாம் வெளிநாட்டில் வசிப்பதால் இங்கேயேதான் செய்தோம். நல்ல நாள், நேரம் பார்த்து,மொட்டை அடித்து, தலையில் தூய சந்தனம் தடவி(மொட்டை அடித்த எரிச்சல் இருக்காது) , குளிப்பாட்டி, புது டிரஸ் போட்டு சாமி கும்பிட சொன்னார்கள். அன்று வீட்டில் சைவம் சமைத்தோம். அவ்வளவுதான். தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு 7 மாதமே ஆவதால் இதனை நினைத்து கவலைப்பட தேவையில்லை. ஆனாலும் தொட்டியில் படுக்க வைப்பதாக இருந்தால் கீழே ஒரு சின்ன மெத்தை அல்லது தலையணையை வைத்து விடுங்கள். குழந்தைகள் இந்த வயதில், தொட்டிலை விட்டு வெளியில் வர நினைத்து தலையை எட்டிப் பார்த்து சில சமயங்கள் விழுந்து விட வாய்ப்புண்டு. தலையனையில் விழுந்தால் அடிபடாது. மொட்டை அடிக்கும்போது குழந்தை அசையாவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். பிடித்த விளையாட்டுப் பொருட்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

அச்சசோ இப்ப நெனச்சா பயமா இருக்கே.என் பொண்ணுக்கு பிறந்து ஒரு மாதத்தில் ஆளை வெச்சு மொட்டை அடிச்சோம்..பிறகு 5 மாதத்திலும்,8 மாதத்திலும் நானே தான் குழந்தை தூங்கும்போது ரேசரால் மொட்டை அடிச்சேன்...சின்ன காயன் கூட படாம அழகா மொட்டை அடிச்சேன்...முடிஞ்சு தேங்காஇ எண்ணை தேச்சேன்....எனக்கு ஆள் வெச்சு மொட்டை அடிக்கிரது கஷ்டமா தோனுச்சு..குழந்தை அழுது ஒரு வழி பன்னிடும்..அன்னக்கி பயமே இருக்கல..இப்ப நீங்க எவ்வளவு கவனம மொட்டை அடிக்கரத பேசும்போது அன்னகி செஞ்சது நெனச்சா பயமா இருக்கு:-0

தளிகா, ஏன் இவ்வளவு நாள் கழிச்சு பயப்படறீங்க. ஒவ்வொரு மதத்திற்கும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள். நீங்கள் இஸ்லாமியர்கள் என்பதால் முதல் மாதத்திலேயே முடி எடுக்கும் பழக்கம் உள்ளது. இந்துக்கள் 9 வது மாதம் அல்ல்து ஒரு வயதிற்கு முன்னால் முடியெடுக்கும் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள்.
குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 4-6 மாதம் வரை நடு மண்டை ஸ்ட்ராங்காக இருக்காது. அத்ற்குக் காரணம் அந்த இடத்தில் மட்டும் மண்டை ஓடு முழுதாக மூடி இருக்காது. 4 மாதம் ஆனபிறகே அந்த இடம் ஸ்ட்ராங்காக (மண்டை ஓடு சேர்ந்து) ஆகும். அதனால் 1 மாதத்தில் முடி எடுப்பது எத்தனை பாதுகாப்பானது என்று தெரியவில்லை. நிச்சயம் இதையெல்லாம் யோசிக்காமல் அப்படி ஒரு பழக்கத்தை வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மொட்டை அடித்த பிறகு குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

Deva மற்றும் Thalika, உங்கள் கருதுக்களுக்கு மிக்க நன்றி. 7 வது மாதம் என்பது ஒன்றும் குடும்ப வழக்கமல்ல. எஙளுக்கு வசதியான சமயம் என்பதால் முடிவு செய்தோம். மகள் (இஷானி) health-ல் எந்த பிரச்சனையும் இருக்காது என நம்புகிறோம். வீட்டில் நாங்களே தான் மொட்டை போட உள்ளோம்.
இப்போது தான் அறுசுவையில் இணைந்துள்ளேன். இவ்வளவு பதில் வரும் என்று எதிர் பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி.

இஷானி- உங்க பொண்ணு பெயரைச் சொல்லும் போதே இனிக்குது. ஒரே விஷயத்தை ஒவ்வொருத்தரும் எப்படி வித்தியாசமா யோசிக்கறோம் இல்ல. எனக்கு வயசாச்சு. தேவா, தளிகா யோசிச்ச கோணத்தில எனக்கு யோசிக்கத்தெரியலை.

தளிகா,
ரீமாக்குட்டிக்கு என் பெண் 'திராட்சைக் கண்ணி' என்று பெயர் வைத்து இருக்கிறாள்.
போட்டோவைக் காண்பித்தது தப்பாப் போச்சு. சீக்கிரமாக அவள் அண்ணனுக்குத் திருமணம் செய்யச்சொல்கிறாள். அவள் அத்தை ஆக வேண்டுமாம்.
அன்புடன்
ஜெயந்தி

போகிற போக்கு பார்த்தால் திருமணம் பொருத்தம் என்ற பகுதியை ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கிறது.

ஜானகி.

திருமணப் பொருத்தம். ஆரம்பிக்கலாமே. தளத்திலேயே ஒரு eligible bachelor இருக்கிறார்.

பாபு: பாபுவின் டயலாக் வரவேற்கப்படுகிறது. ஹேமா, தேவாவிடம் இருந்து

அன்புடன்
ஜெயந்தி

ஆஹா, இப்பத்தான் முதல் முறையா ஒருத்தர் நான் சம்பாதிக்கிறதுக்கு வழி சொல்லியிருக்காரு. ரொம்ப ரொம்ப நன்றி. திருமணப் பொருத்தம் பகுதிய சீக்கிரமே ஆரம்பிச்சிடலாம். அறுசுவை டாட் காமை சீக்கிரமாவே பல்சுவை டாட் காமா மாத்தணும் போல இருக்கு.

அக்கா, நான் eligible bachelor இல்லை. ever bachelor. என் பேருக்கு பின்னாடி போட்டுக்கிற B.E க்கு நான் கொடுத்துக்கிற விளக்கம் இதுதான்.

மேலும் சில பதிவுகள்