ஆப்பம்

ஆப்பம் மாவு மீதமாகிவிட்டால் அதை fridge-ல் வைத்துவிட்டு மறுநாள் ஆப்பம் பண்ணினால் ஆப்பம் நன்றாக வருமா?

vanakkam,

appam mavai fridgela vechu panalam no problem nala varum..but nenga motha mavaum firste use panidatenga...konja konjama evalavu thevaiyo yeduthu paninengana 1 week varai nala irukum.

bye.

ஃப்ரிட்ஜ்லயிருந்து எடுத்த உடனே அப்பம் செய்யாமல் கொஞ்ச நேரம் வெளியே வெச்சுட்டு அப்ரம் செய்யுங்க..நல்ல வரும்

ஆப்ப்மவை chill trayil வைத்து store பண்ணினால் ஒரு வாரத்திர்க்கு நன்ட்ராக இருக்கும்

Today is a new day.

பதிலளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நீங்கள் தமிழிலேயே பதிலழிக்கலாமே...

இலகுவாக முறையில் தமிழில் எழுதுவதற்கு
<a href="http://www.kayal.dk/tamil">http://www.kayal.dk/tamil</a>

இலகுவாக முறையில் தமிழில் எழுதுவதற்கு
<a href="http://www.kayal.dk/tamil">http://www.kayal.dk/tamil</a>

அதே ஆப்பமாவில் ,கடுகு,உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு தாளித்து,வெங்காயத்தையும்,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி போட்டு ஒரு கலக்கு கலக்கி பனியாரமாக சுடலாம். நன்றாக வரும்.

மற்றோரு முறை ,
ஆப்பமாவுடன் ,வெல்லதை 2 ஸ்பூன் நீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து லேசாக சுடவைத்து வடிகட்டி ஊற்றவும்.
இதை இனிப்பு பனியாரம் --ஆக சுடலாம்.
மிக மிக நன்றாக இருக்கும்

ஆப்ப மாவுடன் வெல்லப்பொடி சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு துருவிய தேங்காய் மற்றும் சிறிது சோடா உப்பு சேர்த்துக் கலந்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவையான இனிப்பு இட்லி கிடைக்கும் எங்கள் ஊரில் இதற்கு விவிகா என்று பெயர்.

மாவு ரொம்பவும் நீர்த்து இருந்தால் இனிப்பு இட்லி சரியாக வராது.

anunissa
அப்ப மாவு தயாரிப்பது எப்படி?
அப்பம் சுட தனிப் பாத்திரம் வேன்டுமா

anunissa

டியர் அனுஷியா (ஆப்பம்)

கூட்டாஞ்சோறில் ஜலீலா என்ற குறிப்பில் நான் முட்டை ஆப்பம் கொடுத்துள்ளேன் அதை கிளிக் பண்ணி ஆப்பத்திற்கு உரிய குறிப்பு மட்டும் எடுத்து கொள்ள வேண்டியது
இல்லை சிற்றுண்டி வகையிலும் இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்