ஜாலர் பரோட்டா

தேதி: September 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

ஜாலர் செய்முறை அறுசுவை யாரும் சமைக்கலாம் பகுதியில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. ஜாலரை இன்னும் சுவைக்கூட்டி, கீழ்கண்டவாறு ஸ்டஃப்டு பரோட்டாவாக செய்து சாப்பிடுவர். இது அபார ருசி கொண்டது. <a href="node/2169" target="_blank">ஜாலர் செய்முறை அறிய </a>

 

சிக்கன் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 4
முட்டை - 2
காரட் - ஒன்று
கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
உருளைக்கிழங்கு - ஒன்று
கொத்தமல்லி - 4 கொத்து
உப்பு - அரை தேக்கரண்டி


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் காரட் இரண்டையும் தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு 30 நொடி வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, காரட் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் 3 நிமிடம் கழித்து திறந்து பொடியாக நறுக்கிய வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா ஆகியவற்றை போட்டு கிளறி ஒரு நிமிடம் மூடி விடவும். ஒரு நிமிடம் கழித்து திறந்து மேலே கொத்தமல்லி தழையை தூவி கிளறி விடவும்.
மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, 2 நிமிடம் பொரித்து எடுத்து அதை மசாலாவுடன் சேர்த்து அனைத்தும் ஒன்றாகும் படி கிளறி இறக்கவும்.
நமது இணையத் தளத்தில் கொடுத்திருக்கும் செய்முறைப்படி ஜாலர் மாவு தயாரித்துக் கொள்ளவும் (<a href="node/2169" target="_blank">ஜாலர் செய்முறை அறிய </a>). ஒரு தவாவை அடுப்பில் வைத்து, மேலே லேசாக நெய் தடவவும். ஜாலர் குவளையில் மாவை எடுத்துக்கொண்டு, குவளையை தவாவிற்கு நேராக சுற்றி, மாவை விசிறவும். ஜாங்கிரி, முறுக்கு பிழிவதுபோல் குவளையை சுற்றவும்.
அதன் பின்னர் ஒரு தட்டில் இரண்டு ஜாலரை வைத்து அதில் தயாரித்த மசாலாவை ஒரு பக்கத்தில் வைத்து அந்த பக்கத்தை மடித்து பிறகு இரண்டு ஓரங்களையும் மடித்து ரோலாக சுருட்டவும்.
பிறகு ஒரு குழியான தட்டில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும். அதில் தயாரித்த ஜாலர் பரோட்டா ரோலை தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் முட்டையில் தோய்த்து எடுத்த ஜாலர் பரோட்டா ரோலை போட்டு சுற்றிலும் வேகவேண்டும் என்பதற்காக, வாணலியியை கையில் எடுத்து முன்னும் பின்னும் ஆட்டி பரோட்டாவை உருட்டவும். 2 நிமிடம் கழித்து பரோட்டா சுற்றிலும் பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
இஸ்லாமியர்கள் இல்லங்களில் அதிகம் செய்யப்படும் இந்த ஜாலர் பரோட்டா, வரும் விருந்தினர்களுக்கு சிறப்பு உணவாக பரிமாறப்படும். இதற்கு பக்க உணவு எதுவும் தேவையில்லை. இதனை சிக்கன் சேர்க்காமல் காய்கறிகள் மட்டும் சேர்த்து செய்யலாம்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

what is the கறி மசாலா? please tell me...

கறி மசாலா செய்முறையை திருமதி. பைரோஜா அவர்கள் மற்றொரு குறிப்பில் கொடுத்துள்ளார். அதனை அப்படியே கீழே தருகின்றேன்.

கறி மசாலா செய்முறை

சீரகம் 250 கிராம், மிளகு 100 கிராம், சோம்பு 100 கிராம், ஏலக்காய் 10 கிராம், கிராம்பு 15 கிராம், பட்டை 25 கிராம் எடுத்துக் கொள்ளவும். சீரகம், சோம்பு, மிளகு மூன்றையும் காய வைத்து எடுத்து மற்றப் பொருட்களுடன் சேர்த்து இயந்திரத்தில் அரைத்துக் கொள்ளவும்.

ஃபைரோஜா அவங்க எப்படி இருக்காங்க??இப்ப எல்லாம் மாறி குணமாயிடாங்களா?

ஃபைரோஜா அவர்கள் குணமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நினைவு வைத்து கேட்டதற்கு நன்றி. இந்த குறிப்பு அவர் எப்போதோ கொடுத்தது. அவரது ஏராளமான குறிப்புகள் இன்னும் வெளியிடப்படாமலே இருக்கின்றது.

இந்த ஜாலரை அச்சில்லாமல் செய்ய வேர வழி இருக்கா?இடியப்பம் பிழியரதுல செஞ்சா வருமா?

இது ஃபைரோஜாவின் வேர படமா இல்ல முன்ன இருந்த அதே படமான்னு தெரீல..இதுக்கு முன் கொடுத்த படத்தில் ரொம்ப சோர்வா பாவமா இருந்தாங்க..இப்ப இதுல நல்ல இருக்காங்க..எனக்கு தோனுதா இல்ல இது புது படம் தானான்னு தெரீல

அய்யோ ஒரே ஆசையா இருக்கே..அச்சு இல்லையே

தளிகா, நல்ல ஜோக். இந்த சைட் முழுக்க அவங்களோட ஒரே படத்தைதான் பயன்படுத்தியிருக்கோம். நாம மனசுல என்ன நினைச்சு பார்க்கிறோமோ, அப்படியே அவங்க தெரியுறாங்க இல்ல..

அப்புறம் அந்த அச்சு(ஜாலர் குவளை) இல்லாம இதை சரியா செய்ய முடியாது. நீங்க வேணா ஒரு டம்ளர்ல மூணு ஓட்டையை போட்டு ட்ரை பண்ணிப் பாருங்க. சரியா வரலைன்னா என்னை திட்டாதீங்க.

(உங்க நாட்டுக்காரங்க ஒருத்தங்களுக்கு நானும் ஒரு வருசமா ஜாலர் குவளை வாங்கித்தரேன்னு சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்கேன்.. இன்னமும் வாங்கிக் கொடுத்தபாடில்ல..) இதுக்கு நிறைய தேவை இருந்துச்சுன்னா அறுசுவை ஆன்லைன் சேல் இப்பவே ஆரம்பிச்சிடலாமே..! :)

ஹஹஹாஅ..நானும் சிரிச்சேன்..எனக்கு தான் தோனுதான்னு சந்தேகம் இருந்ததால தான் கேட்டேன்...ச்சே இது தெரிஞ்சா பேசாம மெயில்ல கேட்டிருப்பேனே ஷேம் ஷேம்....இனி பாருங்க எல்லாம் வரிசைய சிரிப்பாங்க:-D..மூணு ஓட்டையை எதால போடுரதுன்னு ஒரு ஐடியா சொல்லுங்களேன்...

தளிகா:-)

டியர் ருபீனா
ஜாலர் குவளை என்னிடம் இரண்டு இருக்கிறது ஒன்றை அனுப்பவா?அப்புறம் நான் சொல்வதை முயற்ச்சித்து பாருங்களேன்,கன்ஸ்டர்ட் மில்க் டின் காலியானது இருந்தால் ஒரு ஆனியை கொண்டு ஒரு ஓட்டை மட்டும் போடுங்கள்,ஜாலர் குவளையில்,1,2,3 என ஓட்டை உள்ள குவளைகள் விற்ப்பனையில் உண்டு நான் அதிகம் 1 அல்லது 2 துளைகள் உள்ள குவளைகளை பாவிக்கிறேன்.நீங்கள் டின்னில் ஓட்டை போட்டு செய்து பாருங்களேன்!

KINDLY INFORMATION JALRA HUTCH AVAILABLE IN NAGOOR NAGAPATTINAM DIST

அறுசுவை தேன் சுவை

Thank you sir

dear admin sir thank you very much

ரஸியா அனுப்பவெல்லாம் வேனாம்..வேனா ஜாலர் பராத்தாவையே செஞ்சு அனுப்புங்க.வேன்டாம்னு சொல்லமாட்டேன்.:-)
நான் டின்னில் ஓட்ட போட்டு செஞ்சு பாக்கரேன்..வருமான்னு தெரீல..இல்லாட்டி 3 கோன் செஞ்சு ஒண்ணா பிழிஞ்சு பாக்லாம்..எப்படியும் இதை செஞ்சுடனும்..வீகென்ட் வரட்டும்

டியர் ரூபினா

நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் பரவாயில்லையா ? நீங்க ரொம்ப ஆசைபடுவதால் சொல்லுகிறேன் ஒரு மொத்த பிளாஸ்டிக் பையை எடுத்து மாவை ஊற்றி ஒரத்தில் ஓட்டை போட்டு (ஒன்றோ இரண்டோ ) கவனமாக கொஞ்சம் மாவில் செய்து பாருங்கள் சரியாக வரும் என்று நினைக்கிறேன் இல்லையென்றால் தயவுசெய்து திட்டாதீங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

இல்ல திட்ட மாட்டேன்..அப்டி தான் கோன் செய்லாம்னு இருக்கேன்..எனக்கு மெஹந்தி போட்டு நல்ல பழக்கம் இருக்கு:-)..அதனால அதும் ஈசியா வரும்னு நினைக்கிரேன்..பாக்கலாம்..ரொம்ப நன்றி ஜுலைஹா:-)

மருதாணி என்றால் கொங்சம் கெட்டியாக இருக்கும் இது தண்ணீராக இருக்கும் பார்த்து கவனமாக செய்யுங்கள் செய்துவிட்டு சொல்லுங்கள் வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

டியர் ருபீனா
நீங்க இதை இடியப்பம் போல் கற்ப்பனை பண்ணாதீர்கள்,இதன் மாவு மைதா தோசைக்கு கரைப்பதுபோல் கரைக்க வேண்டும் அதனால் இதை பிழிய முடியாது இதற்க்கு ஜாலர் வீசுவது என்பது வழக்கம்,எனக்கும் ஆசைதான் உஙளுக்கு செய்துதர ! இந்த ஜாலர் பராட்டாவை நன்றாகவே செய்வேண்,ஃபிரான்ஸுக்கு வாங்க பெரிய விருந்து தருகிறேன்!

ஃப்ரான்ஸ்க்கா வந்துரலாம்..அவருக்கு அங்க ப்ராஜெக்ட் இருந்தா நான் உங்க கிட்ட வர்ரதுக்காகவே அவரோட ஒட்டிக்கரேன்
எதுக்கும் கொஞ்சம் கட்டியாவே செஞ்சு பாக்ரேன்...ஒன்னும் முடியாட்டி பேசாம ஜிலேபி மாதிரி பன்னிரலாம்

வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள் ,ஆனால் இது தண்ணிவாட்டாக தான் கரைத்து செய்யனும் ருபீனா!

ஏங்க.. நீங்களே சமையல்ல மெஹந்தி போடுறப்ப மத்தவங்க ரங்கோலி போடக்கூடாதா?! இப்படி அநியாயத்துக்கு ஒருத்தரை(இருவரை?) கிண்டல் பண்ணி அனுப்பிச்சிட்டீங்களே.. நியாயமா..

உங்களுக்கு எப்படி தான் இப்படியெல்லாம் கரெக்டா கிடைக்குதோ:-D..ஆமா அவங்க அப்ரம் வந்தாங்களா?

yesterday i perepared the jalar parotta . it's very good taste. my hubby like that taste. thankyou very much sister . keep it up. i will pray for you.

alhamdhulillah

akka,
i want to prepare jalar aapam..,but i dont have that machine.. i tried to put hole in some plastic youghurt cups, but i want to know the distance between two holes or three holes..,

எனக்கு தோனிய ஒரு ஐடியா!!! 3 ஜிப்லாக் பேகில் சம அளவில் மாவை ஊற்றி மூன்று ஜிப்லாக் பேகையும் ஒரே கத்தரி கோலால் வெட்டினால் ரெடி?!!!

--'அடைவதற்கு எதுவும் இல்லை' என்று உணர்தலே ஞானம். 'இழப்பதற்கு எதுவும் இல்லை!' என்று உணர்வது அறிவு. இரண்டில் ஒன்று வந்தால் பயம் தானாகப் போய்விடும். அப்போது தன்னம்பிக்கை பிறக்கும்!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு தளிகா, ஜாலர் குவலை இல்லயென்றால் .. கேக் க்ரீமிர்க்கு பயன்படுத்தும் கோன் ஷேப் ப்லாஸ்டிக் குவலையை பயன்படுத்தி பாருங்களேன் ... என்னடா இத்தனை வருஷம் கலிச்சி சொல்ரேனு பாக்குறீங்களா ... சாரி மா நான் புதிதாக இனைந்துள்ளேன் ... :))

Express Yourself .....