தாய் ஃபிஷ் கிரேவி

தேதி: September 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தாய் ஃபிஷ் - 1
புளி - ஒரு எழுமிச்சை அளவு
தக்காளி - பாதி (பெரியது)
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - பாதி (பெரியது)
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
கருவேப்பிலை - சிறிது
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிது
கடுகு - சிறிது
வெள்ளை பூண்டு - 3 பல்
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.பூண்டை சிறியதாக நறுக்கி வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு நன்கு பொரிய விடவும்.

பின் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, இஞ்சி,பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கி, தக்காளி,பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியதும் உப்பு,மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் கரைத்துவைத்த புளி கரைசலை ஊற்றி நன்கு கொத்திக்கவிடவும்.கொதித்ததும் கொத்தமல்லி இலையை சேர்த்து சிறிது நேரம் கழித்து நறுக்கிய மீன் துண்டுகளை போட்டு தீயை மிதமானதாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

மீன் நன்கு வெந்து கிரேவி போல் ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பறிமாறவும்.


இது சாதம் ,சப்பாத்தி, பரோட்டா, நாண் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புல்ல கதிஜா தாய் ஃபிஷ் கிரேவி மிகவும் நன்ராக இருன்தது. நான் இப்பொலுதுதான் புதிதாக இனைன்திருக்கிரென்.

Realy all dishes are suoer in this site

Friends , have a nice day

suji

எப்படி இருக்கீங்க. புதிதாக இணைந்த உங்களை வரவேற்க்கிறேன். தாய் பிஷ் கிரேவி செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

நல்ல மணமும் ருசியுமாயிருந்தது.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நல்லா இருந்ததா செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.