ப்லீஸ்.. என்னயும் சேத்துக்கோங்க..

ஹாய் ப்ரன்ட்ஸ்,

எனக்கு இந்த சைட் ரொம்ப புடிச்சி இருக்கு. அம்மா மடியில் தலை வக்கிரமாதிரி ஒரு சுகம். ப்லீஸ்.. என்னயும் சேத்துக்கோங்க..

அன்புடன்,
காஞ்சனா

ஹலோ காஞ்சனா,

நல்லாருக்கீங்களா? தப்பா எழுதினாக்கூட தமிழ் எழுதினா தான் நாங்கெல்லாம் பேசுவோம்(சும்மா உடான்ஸ்). வாங்க வந்து ஐக்கியம் ஆயிடுங்க. ஏதாவது ஒரு அரட்டை கச்சேரில போய் சேர்ந்த்துடுங்க. ஒரு எச்சரிக்கை:- வெளிய வர ரொம்ப கஷ்டப்படுவீங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வணக்கம் ஹர்ஷினி,

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி.

நெறைய பேசுவோம்..

வாழ்க வளமுடன்,
காஞ்சனா

காஞ்சனா,
இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். வாங்க, வாங்க. வெல்கம்.

அன்புடன்
ஜெயந்தி

காஞ்சனா, "அம்மா மடியில் தலை வக்கிரமாதிரி ஒரு சுகம்" சொன்னாலும், சொல்லவிட்டாலும், இது நம் எல்லோருக்கும் தாய் வீடுதான்!அம்மா வீட்டில் நம் அண்ணன்,தம்பி, அக்கா,தங்கைகளுடன் சிரித்துவிளையாடும் ஒரு உணர்வுடன்தான்,இங்கு வந்து பழகுகிறோம். உண்மைதானே, சொல்லுங்கள் தளிகா,ஹேமா,வின்னி,ரோஸ்மேரி.ஹர்ஷினி,ஜெயந்தி
மேடம்( ஹப்பா,மூச்சு வாங்குதுப்பா)
அன்புடன் விமலா.

விமலாக்கா சொன்னா அதுக்கு அப்பீல் உண்டா. வாங்க காஞ்சனா, வந்து நிறைய பேசுங்க. இங்க ஜெயந்தி அக்கா, செல்வி அக்கா, விமலா அக்காதான் லிஸ்டில் முதல்ல. அடுத்தது நானு. எனக்கு அப்புறம்தான் மத்தவங்க எல்லாம். இது என்ன லிஸ்டுன்னு கேக்கரீங்களா? (ஹி.ஹி அது ஒன்னுமில்ல)

விமலா மேடம் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறில்லை. போதுமா மேடம்? ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா, எப்போதிருந்து சாட்சி கூண்டுல ஏறி சொல்ல ஆரம்பிச்சிங்க? இருந்தாலும்,உண்மைக்கு நன்றி.
அன்புடன் விமலா.:)

ஹலோ ஹர்ஹினி, விமலா மேடம்,ஹேமா,ஜெயந்தி மற்றும் வின்னீ(

அனைவருக்கும் எனது நன்றி!
நான் இப்போ H1 ல இருக்கேன். வேல தேடிகிட்டு இருக்கேன்.
ரெண்டு பசங்க..
கணவரும் கணிணி துறை தான்..

ஹேமா மாதிரி எல்லாம் படிக்கறது இல்ல..
அப்ப அப்ப படிப்பேன்...

உங்க எல்லாரோட சமையல் குறிப்பும் சூப்பர்..

வாழ்க வளமுடன்,
காஞ்சனா

மேலும் சில பதிவுகள்