குருமா குழம்பு

தேதி: September 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

உருளைக்கிழங்கு - 3
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - 2
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - கால் கப்
புளி - சின்ன எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டையை சிறு சிறுத் துண்டுகளாக உடைத்து போட்டு அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி விடவும்.
மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சோம்பு, தேங்காய் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கிய பிறகு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை போட்டு தீயை குறைத்து வைத்து ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.
அதன் பின்னர் அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். விரும்பியவர்கள் வாசனைக்காக அரை தேக்கரண்டி மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி விட்ட பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைத்து குருமாவை நன்கு 8 நிமிடம் கொதிக்க விடவும்.
குருமா கொதித்து வாசனை வரும் போது மூடியை திறந்து ஒரு முறை கலக்கி விட்டு அதன் பின்னர் தீயை குறைத்து வைத்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
மசாலா வாசனையுடன் உருளைக்கிழங்கு குருமா குழம்பு தயார். இதனை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. சூரியகலா அவர்கள். இவர் அசைவ உணவுகள் தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi suryakala,
this is shiva,i have a question about this recipe,can we prepare the recipe using green peas instead of potato,will it taste good.please reply.i need to try this recipe tommorrow,waiting for your reply.
thanks,
shivashankari

சூரியகலா,

இந்த குழம்பை பார்த்தாலே சமச்சு சாப்பிடனும் போல இருந்துச்சு. ஆனா கிச்சன் போனா உருளை இல்ல. ஆனா இத நிச்சயமா இன்னொரு நாள் செஞ்சு பார்த்து சொல்றேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான் இத சமச்சுட்டேன்..சின்ன சின்ன ஆல்டெரேஷன் பன்னினேன்...நாங்க பொட்டாடோ சாப்பிட மாட்டோம்..அதனால கேரட்,பீன்ஸ்,பீஸ் போட்டேன்..நல்லா வந்தது இடியப்பத்துக்கு சூப்பர்

நான் இந்த குழம்பு அன்னைக்கே செய்துவிட்டேன். ரொம்ப சூப்பராக வந்துச்சு. நான் வெண்டக்காய் (உருளை இல்லாததால்)போட்டு பண்ணேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>