தேன்

தேன் உறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தேன் உறையுமா?நான் இதுவரைக்கும் தேன் வாங்கி உறஞ்சதில்லையே..இனி ஒரு வேள வெல்லம் கலக்கன அடல்டெரேடட் தேனா என்னவோ..நீங்க எங்க இருகீங்க?இனி ஒரு வேள குளிர் ப்ரதேசத்துல உறையுமான்னு தெரீல...வேர யாராவது உங்களுக்கு உதவி செய்வாங்க.(பின்ன ஏன் நீ மூக்கை நுழைச்சேன்னு மட்டும் கேட்டுராதீங்க)

தளிகா:-)

சே...... சே....... அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். நான் இருப்பது கனடாவில். இங்கே கிடைப்பது சுத்தமான் தேன் என்று தான் நினைக்கிறேன். நான் தமிழில் சிரமப்பட்டு டைப் செய்ய ஆரம்பித்ததற்க்கு inspiration தாங்கள் தான் . நன்றி.

தேன் மட்டுமல்ல, திரவ நிலையில் உள்ள பொருட்கள் அனைத்துமே உறையக்கூடியவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு உறைநிலை அளவு (freezing point) உள்ளது. அதனைத் தொடும்போது அல்லது தாண்டும்போது கண்டிப்பாக உறையும். தேனைப் பொறுத்தவரை அதன் freezing point மிகவும் குறைவு. வெப்பநிலை -5 டிகிரி சென்டிகிரேடுக்கு குறைவாக செல்லும்போது உறையலாம். மிகச் சரியான அளவு தெரியவில்லை.

பதில் அளித்த அட்மின் அவர்களுக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்