அரைக்கீரை புளிக்கடைசல்

தேதி: September 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்கீரை - ஒரு கட்டு
தக்காளி - 2
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரைத் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கல் உப்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

கீரையை காம்பு இல்லாமல் ஆய்ந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அலசிய கீரையையும், அதனுடன் தக்காளியையும் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் அல்லது இட்லி பானையில் வைத்து மூடி, ஆவியில் வேக விடவும்.
சிறிது நேரம் வெந்ததும் இட்லி பானையில் இருந்து எடுத்து பார்த்தால் கீரை நிறம் மாறியிருக்கும். அதன் பின்னர் ஒரு கரண்டியை வைத்து கீரை மற்றும் தக்காளி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு மசித்து விடவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு தாளிக்கவும்.
அதன் பின்னர் மசித்து வைத்திருக்கும் கீரையில் தாளித்தவற்றை ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பில் வைத்த பிறகு 2 நிமிடம் வேக விடவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
அரைக்கீரை புளிக்கடைசல் தயார். இதை சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள அட்மின்
தினமும் காலையில் அலுவலகம் வந்ததும் ஒரு தடவையவது அறுசுவைய்ய பார்த்தால் தான் வேலைய்ய் ஒடும் கடந்த ஒரு வருடமா படித்து வருகிறேன் ரொம்ப நன்றி.இன்று குறிப்பில் அரைகிரை புளிகடைசலில் புளி குறிப்பிடவில்லை.

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா

என் யூகம் சரியென்றால் புளிக்கு பதிலாகத்தான் தக்காளி சேர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அட்மின் அவர்களே, என் யூகம் சரியா ?

டியர் ரிட்டா
அதற்கு அரைகிரை புளிகடைசல் சொல்ல கூடாது
ஒரு வேளை புளியெ மறந்து இருப்பறங்காட்டியும்
ஒவ்வென்றிற்கும் ஒரு பெயர் பெயரை வைத்துதான் கண்டுபிடிக்கமுடியும்

Jaleelakamal

சகோதரி அவர்களுக்கு,

இதனை தயார் செய்த திருமதி. மங்கம்மா (பெயர் குறிப்பிட மறந்துவிட்டோம்) அவர்களிடமே விளக்கம் கேட்டோம். அவர்கள் செட்டிநாட்டினை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் செய்யப்படும் இந்த கடைசலில் புளி சேர்ப்பதில்லை என்றும், புளிப்பு சுவைக்காக தக்காளி சேர்த்து செய்வதால் இதற்கு புளிக்கடைசல் என்றும் பெயர் உள்ளதாக விளக்கம் தெரிவித்தார்.

அரைக்கீரை புளிப்புகடைசல் என்று பெயரிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ?!

anbudanஅட்மின் அவர்களுக்கு,

நாங்கள் இதில் ஒரு தக்காளிக்கு பதில் சிரிதளவு புளி சேர்ப்போம்.அதனால் தாராளமாக அரைக்கீரை புளிக்கடைசல் என கூறலாம். நன்றி.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan