not able to view any recipes

dear anna

i ahve already sent an email to u rregarding my difficulty in viewing pages.could please reply me why permission is not allowed.I am hoping that it should be a server problem.

thanks in advance

கடந்த இரு தினங்களாக அறுசுவையை பார்வையிடுவதில் உங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகின்றோம். இது எதிர்பாராத சர்வர் பிரச்சனை. சில விஷமிகள் அறுசுவையின்(சர்வர்) மீது நடத்திய தாக்குதலும் இதற்கு காரணம். நேற்று முழுவதும் என்னாலும் லாகின் செய்ய முடியவில்லை. உங்களுக்கு தோன்றிய அதே வெள்ளைப் பக்கம்தான் எனக்கும் தோன்றியது.

பிரச்சனையை ஆராய்ந்து சரி செய்வதற்கு முழுநாள் ஆகிவிட்டது. என்னாலும் லாகின் செய்யமுடியாததால், சில விசயங்களை அவ்வளவு எளிதாக செய்யமுடியவில்லை. சிலர் Bots மூலம் தொடர் தாக்குதல் நடத்தி சர்வர் லோடு அதிகரிக்கும் வகையில், தொடர் ரெஜிஸ்ட்ரேஷன், பக்கங்கள் திறத்தல் என்று முயற்சித்து இருக்கின்றார்கள். அதன் விளைவால் டேட்டாபேஸில் பாதிப்பு உண்டானது. பிரச்சனைகளை சரி செய்து வருகின்றேன். இன்னும் சில செக்யூரிட்டி சம்பந்தமான விசயங்களை தீவிரப்படுத்தி, இதுபோன்று எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் செய்ய வேண்டியிருப்பதால், இன்னும் சில தினங்களுக்கு பெயர்பதிவு செய்தவர்களை மட்டும் அனுமதிக்க விரும்புகின்றோம். இது சில விசயங்களை கண்டறிய எங்களுக்கு உதவியாக இருக்கும்.

சகோதரி இந்திரா அவர்கள் வருகையாளர்களை விரட்டுவதற்கு நல்ல வழி இது என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார். அவரது கோபத்திற்கு காரணம் அறுசுவையை பார்வையிட முடியவில்லையே என்ற வருத்தம்தான் என்பது புரிகின்றது. நிச்சயம் யாரையும் விரட்ட வேண்டும் என்று எந்த ஒரு தளத்திலும் இப்படி செய்யமாட்டார்கள். இது வேண்டுமென்றே செய்த செயல் அல்ல. இதனால் எங்களுக்கு நஷ்டம்தானே தவிர எந்த வகையிலும் லாபம் கிடையாது.

சிரமம் பாராமல் சில தினங்களுக்கு பெயர்ப்பதிவு செய்து பார்வையிடவும். இதுபோன்ற விசயங்களில் நீங்கள் எங்களுக்கு உதவிடும் பட்சத்தில், நிறைய பிரச்சனைகளை தவிர்த்து, நாங்களும் உங்களுக்காக சிறப்பாக பணியாற்ற முடியும்.

அன்புடன்
பாபு

Dear admin sir,
Romba thanks. enna reason endru sonnatharkku.
INDIRA sonna karuthuthan ennakkum thonichu. But nan solvatharkkul avanga ezhuthitanga. of course my name also indira.
But after reading your reason i got shock. when i scribbled in mandram. since, last two days i can't enter into arusuvai.
parunga neenga anumathikalannu, mandrathil enter aaga vendum enil thaniyaga pathivu seyanum endru ninaithu indiragandhi endra payaril marumurai pathivu seythurukkaen.

அருசுவைக்குள் நுழய முடியவில்லையே!!!!!!!!! என்ட்ர ஆதஙதில் இருந்த நெரம் பர்து உஙக (அட்மின்) பதிவை படிச்சனா உடன தமிழில் அச்சடிக்க உதவும் பக்கத்த தேடி அடிக்க பொருமை இல்ல. அதான் ஆங்கிலதில அடிச்சிட்டேன். ஐ அம் வெரி சாரி அட்மின் சார்

என்னொட நேம்ஸ்ஸுக்கு (இந்திரா) ரொம்ப தேங்ஸ் என்னொட எண்ணத்தை அப்படியே கூரியதற்கு.

gayathri chandru nan inru rompa payanthu viten.arusuvai .com open agathatal kalai muthal malai varai muyarchi seithen.nan thinamum arusuvai.comai parvai iduven.inru open agathatal nonthu poi viten.kadaisiyaga nan 4 mathatirku munpu arusuvuyil register paniyathu napagam vanthathu.vudane passwordai poten .enaku palayapadi arusuvai parvai ida mudigirathu .ipoluthutan nengal anupiya karanathai padithu therinthu konden.mikka nanri.

gayathri chandru enaku tamilil adika prumayilai.atan angilathil adithu viten manikavum .adutha thadavai kandipaga tamilil muyarchi seykiren

thanks very much for ur information and reason. i am happy that i am able to view now

எனக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது..லாகின் பன்னினப்ப சரியாயிடுச்சு..ஆன நிறைய பேர்க்கு அதுவே முடீலன்னு சொல்ராங்களே?>?

அப்படியே தமிழ் இல்லாத ஆங்கில பதிவுகளையும் தடை செய்துவிடுங்கள் அப்படின்னு சொல்லலாம்னு பாத்தா இது டெக்னிகல் ப்ராப்ளமா? ஐயோ தோழிகள் அடிக்க வராங்கப்பா என்னை.

அன்புடன்
ஜெயந்தி

அட்மின் அவர்களுக்கு
நன்றி
அருசுவையை பார்வையிட முடியாததால் இரண்டு நாட்களில் நிறைய பேர் ரெஜிஸ்டர் பண்ணியுள்ளார்கள் போல. தீபாவளி கூட்டம் தான். வாழ்த்துக்கள்

எல்லாப் பிரச்சனைகளும் ஒரே நேரத்தில் வந்துவிட்டது. சில அவசர வேலைகளின் காரணமாக சென்னை சென்ற நான், இந்த பிரச்சனையால் வந்த வேலை மறந்து இதை சரி செய்வதிலேயே நேரம் செலவிட வேண்டியதாயிற்று. ஒரு வழியாக சரி செய்து, மேலே உள்ள வருந்துகின்றோம் பதிவை போட்டு விளக்கம் கொடுத்த சில நிமிடங்களிலேயே இண்டெர்நெட் கனெக்சன் போய்விட்டது. சென்னை (தி.நகரில்) நடந்து வரும் பாதாளச் சாக்கடை மற்றும் ஏதேதோ பராமரிப்பு வேலைகளினால் AIRTEL ஒயர் இணைப்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டனவாம். இதோ இன்னும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று சொல்லியே இரண்டு நாட்கள் இழுத்தடித்துவிட்டனர். நேற்று இரவு வரை சரியாகவில்லை. இதற்கு மேல் தாங்காது என்று அவசர அவசரமாகப் புறப்பட்டு நாகப்பட்டினம் வந்துவிட்டேன்.

இங்கு வந்து மெயில் பாக்ஸை திறந்து பார்த்தால்... நிரம்பி வழிகின்றது. 400 க்கும் மேற்பட்ட மெயில்கள். அறுசுவையை பார்வையிட முடியாத வருத்தத்தில் நேயர்கள் பொங்கி எழுந்திருக்கின்றனர். ஒருபுறம் சிரமம் உண்டானது குறித்து வருத்தப்பட்டாலும், அறுசுவையை தினமும் சுவாசிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று தெரியவரும் விபரம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெயர்ப்பதிவு செய்துள்ளனர். கெட்டதிலும் ஒரு நல்லது என்று சொல்வார்களே.. இதுதானா!!

அப்படியே பெயர்ப்பதிவு செய்தவர்கள் எல்லாம் மன்றத்தில் உங்கள் பங்களிப்பையும் கொடுத்தால் அறுசுவை இன்னமும் வளர்ச்சியடையும். இவ்வளவு நேயர்கள் அறுசுவையை ஆர்வமாக பார்வையிடுவது எங்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தருகின்றது. அதேநேரத்தில் வெறும் பார்வையிடுதல் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் அனைத்தையும் அவ்வபோது மன்றத்தின் மூலமாகவோ, பின்னூட்டம் மூலமாகவோ எங்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் நாங்கள் இன்னமும் ஆர்வமுடன் செயலாற்ற முடியும். மன்றத்தில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மன்ற உறுப்பினர்களுக்கும் அது உற்சாகத்தை தரும். இது உங்களால் இயலாத காரியம் அல்ல. முயற்சி செய்வீர்களா?

மேலும் சில பதிவுகள்